பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் #51 புத்திரனால் கண்ணபிரானுக்கு அக்ரபூசை (முதல் மரியாதை?) செய்யப்பட்டதைக் கண்டு அழுக்காறு கொண்டு அளவிறந்த வசைச் சோற்களைப் பிதற்றினான். தான் அத்தைக்கு வாக்களித்த 100 பிழைகள் தாண்டியதும் கண்ணனது சக்கராயுதம் சிசுபாலனது தலையைத் துணித்தது; சிசுபாலன் மாண்டான், உடனே அவன் தேசோமயமான திவ்விய உடல் பெற்று எம்பெருமானின் திருவடியை அடைந்து உய்ந்தனன். இந்த வரலாற்றைப் பெரியாழ்வார், - பலபல தாழம்சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை அலவலை மைதவிர்த்த அழகன் அலங்காரன். (4.3:5) (நாழம்.குற்றம்; பழித்த-திட்டின; அலவலமை. அந்பத் தனம்; தவிர்த்த-போக்கியருளின] என பாசுரத்தில் அதுசந்தித்து அகமகிழ்கின்றார். 26. பார்த்தனது தேர்க்குதிரைகளின் விடாயைத் தீர்த் தருளியது: ஒரு சமயம் அருச்சுனது தேர்க்குதிரைகள் தண்ணிர் விடாய் கொண்டு இளைத்தன. அவன் பக்கல் பட்சபதியான பார்த்தசாரதி கடினமான இடத்திலும் நீர் நரம்பு ஒடுவதை அறிய வல்லவனாதலால் அங்கு வருணக் கணையைப் பிரயோகிக்கச் செய்து நிலத்தடி நீரை வெளிக் கிளப்பிக் குதிரைகளை விட்டு நீரூட்டிப் புரட்டி எழுப்பிக் கொண்டு போந்து தேரில் பூட்டிக்கொண்டு வந்து பார்த்தன் முன் நிறுத்த இதைக் கண்ட மாற்றரசரெல்லாம் போர்த்தன் பக்கல் கண்ணனுக்குப் பட்சபாதம் இருந்தபடி என்!” என்று அதிசயித்து இனி நாம் இவனை வெல்லுவது என்பது ஒன்று உண்டோ?’ என்று குடல் மறுகினர். இந்த திகழ்ச்சியின் ஈடுபாட்டை, மன்னர் டிறுக மைத்துனன் மார்க்கொரு தேரின்மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித் தவன் (4.2:7)