பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 153 (துத்ய சாரத்யங்கள். துரியோதனனிடத்தில் தூது சென்றதும் அருச்சுனனுக்குத் தேர் ஒட்டியதும்.) என்று பூரீவசனபூஷணத்திலும் கூறப் பெற்றுள்ளது. 28. உத்தரையின் சிறுவனை உய்வித்தது: துரியோ தனன் இறக்கும் தறுவாயில் (நள்ளிரவில்) அசுவத்தாமா வுக்குச் சேனாதிபதிப் பட்டம் கட்டுவித்துப் பாண்டவர் களைப் பரலோகத்து அனுப்புமாறு கோர, கண்ணன் சகாதேவனுக்கு அளித்த வாக்கின்படி ஐவரையும் அவர்தம் பத்தினியையும் கண் காணாவிடத்தில் மறைத்து வைத்த மையால், பாடி வீட்டில் ஒரு கூடாரத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த இளம் பஞ்ச பாண்டவர்களைக் கொன்று அவர்தம் தலைகளைக் கொண்டு வந்து துரியோதனனுக்குக் காட்ட, அவனும் இக் கோரக் காட்சி யைக் கண்டு புத்திரசோகத்தால் உயிர் நீத்தான். அசுவத்தாமாவும் முனிவர் குழுவில் சென்று சேர்ந்தான். மக்கள் மரித்ததைக் கேட்ட திரெளபதி புத்திரசோகத்தால் தாக்குண்டு பைத்தியம் பிடித்தவள் போலானாள். இவள் நிலையைக் கண்டு பொதுக்க முடியாத பீமனும் அருச்சுனனும் அசுவத்தாமாவின் இருப்பிடத்தை அடைந்தனர். அருச் சுனன் எடுத்த எடுப்பில் நான்முகன் கணையை அவன் மீது பிரயோகித்தான். அசுவத்தாமாவும் தன் அருகில் கிடந்த தருப்பையை மந்திரித்து நான்முகன் கணையாக ஏவினான். இரண்டு பிரயோகத்தாலும் இப்பூவுலகமே அழிந்து விடும் என்ற நிலைமை தோன்றியது. தேவர்களும் மூவரும் வந்து நிலைமையைச் சமாளிக்க முயன்றனர். இருவரும் தத்தம் கணையைத் திரும்பப் பெற வேண்டினர். பார்த்தன் இதற்கு ஒருப்பட்டான். அசுவத்தாமா தனக்கு இது தெரியாதென்றும், ஆனால் வேறு ஒருவர் மீது மாற்றி ஏவத் தெரியும் என்றான். பார்த்தன் தான் விடுத்த கணையைத் திரும்பப் பெற்றான். அசுவத்தாமா சிந்தித்துப் பார்த்தான். பாண்டவ வமிசம்