பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 விட்டு சித்தன் விரித்த தமிழ். தழைக்க ஆமேன் யுவின் மனைவி உத்தரையின் கருப்பத் திலுள்ள குழந்தையே என்று தெரிந்து கொண்டு அதன்மீது திருப்பி விட்டான், கண்ணன் மிகுந்த சினங்கொண்டு பஞ்சாயுதங்களுடனும் தன் மூல உருவுடனும் சென்று அந்த நான்முகன் கணையைத் தவிடு பொடியாக்கினான். சில புராணங்களில் அசுவத்தாமா அபாண்டவாத்திரத்தைப் பிரயோகித்தான் என்றும், அதனால் நீறாயொழிந்த தென்றும், அச்சிசுவை எப்படியும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று சுபத்திரை பிரார்த்தித்தாள் என்றும், அங்கனமே தன் செந்தாமரை போன்ற திருவடியினால் அச்சிசுவை அடி தொடங்கி முடியிறாகத் தொட்டு அருளினான் என்றும், அதனால் அச்சிசு உயிர் பெற்று பேறு காலத்தில் பிரீட்சித்து மன்னனாகப் பிறந்தது என்றும் கூறப்பெற்றுள்ளது. இந்த வரலாற்றை ஆழ்வார், மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் (4.9:6) 1மைத்துனன் மார்-பாண்டவர்கள்; காதலி-திரெளபதி: உத்தரைதன் சிறுவன்.பரீட்சித்து; உயக்கொண்டஉயிர் பெற்று எழச்செய்த) என்று இரு நிகழ்ச்சிகளையும் ஒருசேர அது சந்திக்கின்றார். பிறிதொரு பாசுரத்திலும், மருமகன்றன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே . குருமுகமாய்க் காத்தான் (4.8:3) |மருமகன். அபிமன்யு, சந்ததி - புத்திரன், மைத் துனன்மார் - பாண்டவர்கள்; மகத்து. பாரதம்