பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கன் 155. போராகிற நாமேத யாகத்தில்; விழாமே-அழிந்து படாமல், ! - என்று இந்நிகழ்ச்சி போற்றப்பெறுகின்றது. 29. குடக் கூத்து ஆடியது. பிராமணர்களுக்குச் செல்வம் விஞ்சினால் யாகம் செய்வது போல, இடையர் கட்குச் செல்வம் விஞ்சினால் அதனால் உண்டாகும் செருக்குக்குப் போக்குவீடாக அவர்கள் ஆடுவதொரு சுத்து: இதனைத் தலையிலே அடுக்குக்குடம் இருக்க, இரு தோள் களிலும் இருகுடங்களிருக்க, இரு கையிலும் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே எறிந்து ஆடுவதொரு கூத்து என்பர், குடக் கூத்தென்பது, கண்ணன் பேரனான அநிருத்திரனைத் தன் மகள் உழை (உஷா) காரணமாக வாணன் சிறை வைத்தி போது, அப்பிரான் அவ்வசுரனது சோ (சோணிபுரம்) என்ற நகரிற் சென்று குடங்கொண்டாடியதைக் குறிக்கும் என்பர். இதனை விஷ்ணுசித்தர், குடங்க ளெடுத்தேற விட்டு கூத்தாட வல்லனம் கோவே (2.7:7) (ஏறவிட்டு.உயர எறிந்து, கோவே.தலைவனே..; என்று தம் பாசுரமொன்றில் அநுசந்தித்து மகிழ்கின்றார். 30. வைதிகன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்தது ஒர் அந்தணனுக்கு நான்கு குமாரர்கள். முதல் பிள்ளை பிறந்து பூமியைத் தொட்டதும் காணப் பெறவில்லை. இரன் டாவது, மூன்றாவது பிள்ளைகளின் நிலைமைகளும் அப்படியே, பெற்றவளும் கூட முகத்தில் விழிக்கப் பெரிாதி படி இன்னவிடத்திற் போயிற்றென்று தெரியாமல் கான் வொண்ணாது மூன்று பிள்ளைகளும் போய்விடுகையாலே நான்காம் பிள்ளையைக் கருவுயிர்க்கும் சமயத்தில் அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வந்து, இந்தப் பிள்ளையை யாயினும் பாதுகாத்துத் தந்தருள வேண்டும்' என்று வேண்டினான். அதற்குக் கண்ணபிரான் அப்படியே