பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 விட்டு சித்தன் விரித்த தமிழ் செய்வதாக வாக்குத் தந்தான். ஆனால், அன்று ஒரு வேள்வியில் தீட்சிதனாக இருக்க வேண்டியிருந்ததால் கருவுயிர்க்கும் இடத்திற்கு எழுந்தருள முடியாத நிலையில் இருந்தான். அருகிலிருந்த பார்த்தன் நான் சென்று காப்பாற்றுவேன்' என்று வாக்குத் தந்து அந்தணன்ையும் கூட்டிக் கொண்டு போய்க் கருவுயிர்க்கும் இல்லத்தைச் சுற்றிக் காற்று கூட நுழைய வொண்ணாதவாறு சரக் கூடம் அமைத்துக் காத்துக் கொண்டு நின்றான். அன்று பிறந்த குழந்தையும் வழக்கபடி மாயமாய் மறைந்தது. அந்தணன் கோபங் கொண்டான். அருச்சுனனை இடைமறித்து 'அதமனே, உன்னாலே யன்றோ என் பிள்ளை போம்படி ஆயிற்று, கண்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றோ தடுத்தாய்?" என்று நிந்தித்து அவனைக் கண்ணபிரானருகே இழுத்துக் கொண்டு வந்தான். கண்ணன் அதுகண்டு முறுவலித்து அவனை விடு; உனக்குப் பிள்ளையை நான் கொண்டு வந்து தருகின்றேன்,' என்று அருளிச்செய்து அந்தணனையும் தன்னுடன் கொண்டு தேரில் ஏறி, அருச்சுனனைச் செலுத்தச் சொல்லி, அத்தேருக்கும் இவர்களுக்கும் திவ்விய ஆற்றலைத் தனது சங்கற்பத்தால் கற்பித்து இவ்வண்டத் துக்கு வெளியே நெடுந்துாரம் அளவும் கொண்டு சென்று அங்கு ஒரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தி, தன் நிலமான பரமபதத்தில் தானே புகுந்து, அங்கு நாச்சிமார் தங்கள் கவாதந்திரம் காட்டுவதற்காகவும் கண்ணபிரானது திவ்விய செளந்தரியத்தைக் கண்டு களிப்பதற்காகவும் அழைப்பித்து வந்த அப்பிள்ளைகள் நால்வரையும் அங்கு நின்றும் ஆதி உருவத்தில் ஒன்றும் குறையாமல் கொண்டு வந்து கொடுத்தருளினன் என்பது வரலாறு. இந்த இதிகாசத்தைப் பெரியாழ்வார், . தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுக தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய என அப்ப! (1.6:7)