பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 157° (தனமிகுசோதி-தன்னுடைய நிரவதிக சோதியாகிய பரமபதம்; கடவி.நடத்தி) என்றும், பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நல்வரையும் இறைப்பொழுதில் கொண்டு கொடுத்(து) ஒருப்படுத்த உறைப்பன் (4.8:2) (பிறப்பகம்-கருவுயிர்த்த இடம்: மாண்டு-இறந்து; இறைப் பொழுது-நொடிப்பொழுது:ஒருப்படுத்த. ஒப்புக் கொள்ளச் செய்த.) என்றும் இரண்டு பாசுரங்களில் அது சந்தித்து மகிழ்கின்றார். இந்த வரலாற்றைத் திருமங்கை மன்னன் தம் பெரிய திரு. மொழியிலும் (5.8.2) நம்மாழ்வார் திருவாய்மொழியிலும் (3.10:5) குறிப்பிட்டுள்ளனர். இங்ங்னம் பெரியாழ்வார் அநுசந்தித்த கண்ணனின் தீரச்செயல்களைக் கண்டு மகிழ்ந்தோம்; பெரியாழ்வாரின் அநுபவத்தைப் பெற்றோம். இந் நிலையில், குன்றி னால்குடை கவித்ததும், கோலக் குரவை கோத்த துவும்குட மிட்டும் கன்றி னால்விள வெறிந்ததும் காலால் காளி யன்தலை மிதித்ததும் முதலா வென்ற சேர்பிள்ளை கல்வினை யாட்டம் அனைத்தி லும் அங்கென் உள்ளமும் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலன்; அடியேன் காணு மாறிணி புண்டெனில் அருளே. (பெரு. திரு-9). என்ற குலசேகராழ்வார் பாசுரத்தையும் நினைந்து போற்றுகின்றோம்.