பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பிருந்தாவனத்தில்-வேணுகோபாலன் கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியிலுள்ள நந்தகோபன் முதலாய ஆயர்கள் கண்ணனுக்கு அங்கு அடிக்கடி நேரிட்ட பேரிடர்களை உற்பாதங்கள் எனக்கருதி அவ்விடத்தை விட்டுக் கன்றுகாலி முதலிய எல்லாப் பொருள்களுடனும் பிருந்தாவனம் சென்று அங்குக் குடியேறினர். பிருந்தாவனம் என்பதற்கு நெருஞ்சிக்காடு என்பது பொருள். கண்ணன் அவதரித்ததும் இவ்விடம் அந்நிலை மாறி வளம் கொழிக்கும் விரஜபூமி (மேய்ச்சல் நிலம்}யாக மாறிவிட்டது. வடஇந்தியாவில் சத்திரப் பிரதேசத்தில் உள்ள இந்த விரஜபூமி 108 சதுர மைல் பரப்புடையது. இதில் பல புண்ணியத் தலங்களும் தீர்த்தங் களும் உள்ளன. இதன் நடுவில் தூய பெருநீர் யமுனை பெரு வெள்ளமிட்டுப் பாய்ந்து எங்கும் பசுமைக் காட்சி வழங்கும் மருத வளத்தை அளிக்கின்றது. விரஜபூமியில் கண்ணன் திருவடி படாத இடமே இல்லை எனலாம். திருவாய்ப்பாடி (நந்த கோகுலம்), வடமதுரை (மதுரா), கோவர்த்தனம், இராதை அவதரித்த இராதாபர்காம் என்ற ஊர், கண்ணன் திருவிளையாடல்கள் புரிந்த பிருந்தா 1. பிருந்தாவனம் - வடமதுரையிலிருந்து (மத்ராஇருப்பூர்தி நிலையம்) சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது. வடமதுரையிலிருந்து பிருந்தாவனத்திற்குப் பேருந்து வசதி உண்டு. - -