பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் வேணுகோபாலன் 159 வனம் ஆகிய புனிதமான இடங்கள் யாவும் இந்த விரஜபூமியில் அடங்கியுள்ளன.” பிருந்தாவனம் கண்ணன் குழலூதிக் கோபியருடன் இராசக்கிரீடை (குரவைக்கூத்து) நிகழ்த்திய இடமாகும். இங்குக் காளியன் மடு, கோபியரின் துகிலுரித்த கட்டம், கேசி என்ற அசுரனைக் கொண்ட இடம் (கேசிகட்டம்), கோபியரின் பக்திப் பரவசத்தைக் கண்ட அக்ரூரர் கண்ணிர் மல்க விழுந்து விழுந்து புரண்ட இடம், குழலூதிக் கோபியரின் உள்ளத்தைக் கவர்ந்த வனம் (பான்சி வனம்), மற்றும் சேவாகுஞ்சம், பக்தவிலோசனம் முதலானவைகள் உள்ளன. சில நாட்களில் நள்ளிரவில் இன்றும் கண்ணனின் குழலோசையைக் கேட்பதாக அங்குள்ளோர் கூறுகின்றார். பெரும்பாலான கண்ணனின் தீரச் செயல்கள், திருவிளையாடல்கள் முதலியவை ஆயர்பாடி யிலும், பிருந்தாவனத்திலும், கோவர்த்தனத்திலும் நடை பெற்றன. பிருந்தாவனத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களிலும் கண்ணனின் பல திருக்கோயில்கள் உள்ளன. பெரும்பாலான திருக்கோயில்கள் வைணவத்தின் ஒரு பிரிவினரான சைத்தன்ய மார்க்கத்தினராலும், மற்றொரு பிரிவினராகிய நிம்பார்க்க மார்க்கத்தினராலும் எழுப்பப் பெற்றவையாகும். பிருந்தாவனத்தில் வங்காளிகள் அதிக மாகக் குடியேறியுள்ளனர். பக்தர்களும் பகவர்களும் ஆசாரியர்களும் இப்பூமியில் ஏதேனும் ஒரு பிறவி எடுக்க அவாக் கொண்டனர். இதயத்தில் ஆன்மா இருப்பதுபோல் 2. 1974.திசம்பரில் குருட்சேத்திரத்தில் (அரியானா) நடைபெற்ற அனைத்திந்திய கீழ்த்திசை மாநாட்டின்போது நானும் என் ஆராய்ச்சி மாணவர் திரு, ந. கடிகாசலமும் அரிய நண்பர் பண்டித திரு. வி. நடேசனாரும் வடமதுரை பிருந்தாவனம் இவை இரண்டை மட்டிலும் சேவித்தோம்.