பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 விட்டு சித்தன் விரித்த தமிழ் தொட்டு . நாளை முதல்; கோலம் செய்து . அணி செய்து கொண்டு; என்ற பாசுரத்தில் கண்டு மகிழலாம். இதனைப் பின்பற் நியே கண்ணன் வீட்டிலேயே இருக்கின்றான். ஏழு நாளும் கடந்த பின்னர் பண்டு போலக் காட்டிற்குச் சென்று ஆங்கு ஆநிரை மேய்த்த மகிழ்ச்சிப் பெருக்காலே தன்னை பல்வேறு விதமாக அணி செய்து கொண்டு குழலூதுவது, இசை பாடுவது என்பவற்றை மேற்கொள்பவனாய் தன் தோழன்மாருடன் பெரிய ஒலக்கமாகத் திருவாய்ப்பாடி திரும்பும் கோலத்தைக் கண்டு இடைப் பெண்கள் காமுறு கின்றனர். ஆழ்வார் தம்மை அப்பெண்களாகப் பாவித்துக் கொண்டு இனியராகின்றார். இதை ஒரு திருமொழியில் (3.4) அதுசந்திப்பதைக் கண்டு மகிழலாம். தோழிமார்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளு கின்றனர். தோழிகாள்! இந்த ஊரில் நந்தகோபன் பிள்ளை ஒருவன் இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவன் நல்ல நல்ல ஆடைகளைத் திருவரையில் உடுத்திக் கொண்டு கச்சும் கத்தியுமாக அழகியவும் பரிமளமுள்ளனவு மான மலர் மாலைகளை அணிந்து கொண்டு பல மயில் தோகைக் குடை நிழலில் மாலை நேரமாக இப்பொழுதில் தன் தோழன்மாருடன் இடைச்சேரி ஏற வந்து கொண் டிருக்கின்றான், அவன் வரும் அழகைக் கண்டு களிக்க விரும்பி வழியில் அவனை எதிர் கொண்ட பெண்களில் வளையிழவாதார் ஒருவரும் இலர். நீங்களாவது விழிப் புடன் இருந்து உங்கள் கைவளையல்களை பாதுகாப்பாக நோக்கிக் கொள்ளுங்கள்' என்று மங்கை ஒருத்தி தன் தோழிமார்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றாள். (2) 4. அழகனைக் கண்ட மாத்திரத்தில் அழகிகட்குக் காதல் கரை புரண்டு ஓடும். அவனை அநுபவிப்பது அரிது. அதனால் கணத்துக்குக் கணம் உடல் இளைத்து கை வளைகள் கழன்று விழும் என்று கூறுவது அகப்பொருள் ԼDյrւք.