பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் வேணுகோபாலன் 165 இன்னோர் ஆயமங்கை வேறொரு பக்கத்தில் சதியா லோசனை செய்கின்றாள். கண்ணனின் பவளவாய் முறுவலைக் காணவேண்டும் என்பதுதான் திட்டம். இந்தப் பெண்கள் வயதில் முதிர்ந்திராவிட்டாலும் துணிவில் முதிர்ந்தவர்கள் என்பதாகத் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொண்டவர்கள். இவர்களில் ஒருத்தி தோழி யைப் பார்த்து, அந்தம் ஒன்றில்லாத ஆயப்பிள்ளை அறிந்தறிந்து இவ்வீதி போதுமாகில் பந்துகொண் டான் என்று வளைத்து வைத்துப் பவளவாய் முறுவலும் காண்போம், தோழி! (8) (அந்தம்.அலங்கார விஷயங்களில் எல்லை; அறிந்து அறிந்து.தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து; முறுவல்-புன்சிரிப்பு) என்று பகர்கின்றாள். அந்த ஆய நம்பியின் அழகுக்கும் விளையாட்டுத் தனத்திற்கும் முடிவே இல்லை. 'நமது இதயத்தை அந்த முகம் ஈர்க்கின்றதென்பதை அவன் இப்படியா ஆய்ந்து ஆ ய் ந் து அறிந்துகொள்ள வேண்டும்? அவன் இத்தெரு வழியே வருவதற்குத் தகுதியே இல்லை. அப்படியிருந்தும் அவன் மானம் கெட்டு இத் தெருவழியே வரப்போகின்றான். அப்போது எவ்வகை யினாலாவது வளைத்துக்கொள்ள வேண்டும் என்கின் றாள். 'கூட்டத்தில் அஃது எப்படி முடியும்?' என்று யாராவது ஒருவர் வினவலாமல்லவா? அதையும் மானசீக மாக எண்ணி எதிர்பார்த்துப் பேசுகின்றாள் இந்த மங்கை, * நாங்கள் விளையாடுகின்றபோது எங்கள் பந்தைப் பறித்துக் கொண்டு போனாய் அன்றோ?' என்ற ஒரு பொய்யான காரணம் போதுமல்லவா? நாமே நம் கையி லுள்ள பந்தை அவன் மடியில் எறிந்து விட்டுக் குற்றம் சாற்றுவோம்" என்பது குறிப்பு. அப்படி அவனை வளைத்து வைத்துக்கொண்டு எங்களை யாராக நினைத் தாய்? எங்கள் வீதியல்லவோ இது? என்று நாம் சொன்னால்