பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hé6 விட்டு சித்தன் விரித்த தமிழ் அந்தக் குறும்பனுக்குப் புன்சிரிப்பு வந்துவிடும். அப்போது அவன் திருப்பவளத்தில் முத்துச்சுடர் போன்ற இளநகை தவழும். அதைக்கண்டு அநுபவிக்கலாமல்லவா?’ என்கின் றாள். என்ன அற்புதமான யோசனை? (6) கண்ணனின் வடிவழகில் ஈடுபட்டு உணர்ச்சியற்று தம்பகம்போல் திகைத்து நிற்பாள் ஒர் ஆய மங்கையின் தாய் பேசுகின்றாள்: பற்பல பசுத்திரளின் பின்னே பீலிக் குடைகளாகின்ற சோலையின் கீழ்த் தன் திருமேனி பளபளக்கத் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டும் திருக்கண்கள் மிளிர வேய்ங்குழலை ஊதிக்கொண்டும் அதற்குத்தக்க பாட்டுக்களைப் பாடிக்கொண்டும் வளைந்த தடிகளை வீசி ஆடிக்கொண்டும் இடைப் பிள்ளைகளுடன் மகிழ்ந்து வருகின்ற கண்ணனின் வடிவழகில் சொக்கி என் மகள் அறிவு அழிந்து நிற்கின்றாள்' ' என்கின்றாள் (7). இந்த அநுபவங்களில் ஆழ்வார் தம்மை இடைப்பெண்க ளாகவே பாவித்துக் கொண்டு பேசிக் களிப்படைகின்றார். வேணுகானத்தின் பெருமை : ஒரு நாள் கண்ணன் பிருந்தாவனத்தில் நின்று குழலுதுகின்றான். அந்த இசையோசையைச் செவிமடுத்தவர்கள், அசேனங்கள் உட்பட, மகிழ்வுற்றபடியை ஆழ்வார் தனித்தனியே பேசி அத்திருக்குழலோசையின் சிறப்பினை அநுபவித்து மகிழ் கின்றார். இந்த அநுபவம் ஒரு நாடகம் போல் வெளியிடப் பெறுகின்றது. களம் பிருந்தாவனம். ஆழ்வார் ஓர் இடைய பெண்ணாகித் தம்மைப் போன்றவர்கள் கண்டதையும் கேட்டதையும் அநுபவித்ததையும், காவ லம் பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள் இதோர் அற்புதம் கேளிர் (3;6:1) (அம்.அழகிய; பெரிய - விசாலமான, நாவல் தீவு. சம்புத்தீவு) - என்று பேசத் தொடங்குவது போல நமக்கு நேர்காட்சி யாகிவிடுகின்றார். கண்ணனின் குழலோசை வாருங்கள்: