பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - * > . ** - . . 驚為竇 பிருந்தாவனத்தில் வேணுகோபாலன் fë; என்று அழைக்க உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் தங்கள் கட்டுப்பாடுகளை யெல்லாம் மீறிக் கண்ணன் குழலூதும் இடத்திற்கு வந்து விடுகின்றனர். வந்தவர்கள் ஒரு கயிற்றில் ஒழுங்குபடத் தொடுத்த பூக்கள் போல வரிசை யாக நின்று கண்ணனைச் சூழ்ந்துகொண்டு : நாம் நமது காதலை இங்கனம் வெளிப்படையாக்கினோமே" என்று வெள்கி, அவன் முகத்தை எதிர் நோக்கமுடியாமல் தலை கவிழ்ந்து நிற்கின்றனர். இதோ இந்த முதல் காட்சி, இடஅண ரைஇடத் தோளொடு சாய்த்து இருகை கூடப் புருவம்நெறிங் தேறக் குடவயி றும்பட வாய்கடை கூடக் கோவிந்தன் குழல்கொ(டு) ஊதின போது (2) [அணர் . மேல் வாய்புறம்; ஒல்கி - ஒடுங்கி; ஒடு. (பிறழ்ந்து பிறழ்ந்து) ஒடுகிற, இந்தக் காட்சியைத் தெளிவாக்குவோம். காட்டில் பல இடங்களிலும் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் வெகு தூரம் விலகிப் போய் விடாமல் திரும்பி வந்து சேர்வதற்காகக் குழலோசையை எழுப்புகின்றான். அவன் குழலுதும்போது அவனது மேல்வாய்க் கட்டையின் இடப்பக்கம் இடத்தோள் பக்கமாகத் திரும்புகின்றது: இரண்டு கைகளும் குழலோடு கூடி துளைகளைப் புதைத்துப் புதைத்துத் திறக்கின்றன; புருவங்கள் நெறித்து மேலே கிளர்கின்றன. கண்கள் துளைகள் தோறும் ஒடுவதுபோல் நோக்குகின்றன. வயிறு குடம் போலக் குமிழ்த்துத் தோன்றுகின்றது; வாய் குவிகின்றது. வேறு மெய்ப்பாடு களும் தோன்றுகின்றன. சிறுவி ரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறுவெ யர்ப்புரு வங்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொ(டு) ஊதின போது (3.6:8)