பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விட்டு சித்தன் விரித்த தமிழ் தடவி.துளைகளைத் தடவிக் கொண்டு; பரிமாற. இங்கும் அங்கும் செல்ல; கோட.வக்கரிக்க; கொப்பளிக்க. குமிழ்க்க; கூடலிப்ப-மேல் சென்று வளைய) குழல் ஊதுகின்றபோது கண்ணனின் கைவிரல்கள் துளைகளை மூடவும் திறக்கவும் செயற்படுகின்றன; கண்கள் ஒரு வகையாக மேல் நோக்கி வக்கரிக்கின்றன; திருப்பவளம் பூரிப்பாலே குமிழ்க்கின்றது; குருவியர்வை அரும்பின புருவங்கள் மேல் கிளர்ந்து வளைகின்றன. இவை வேறு மெய்ப்பாடுகள். பசுக்களுக்காக எழுப்பப் பெற்ற ஒசை கேட்ட பாவையர்கள் பசுக்களுக்குமுன் வந்து சேர்கின்றார்கள். மடம யில்களோடு மான்பினை போலே மங்கை மார்கள் மலர்க்கூந்தல் கவிழ உடைருெ கிழஓர் கையால் துகில்பற்ற ஒல்கி யோடரிக்கண் ஓடகின்றனரே! (3.6:2) (ஒல்கி.துவண்டு; அரிக்கண்.ரேகை படர்ந்த கண்.1 கண்ணனின் அன்புக்கடல். அழகின் முழுநிறைவுடன் கூடிய ஆற்றல்.கீதமாக வடிவெடுத்து அந்த உள்ளங்களைக் களவாடிக் கொண்டது. என்னை நோக்கி ஊதினான்! என்னை நோக்கி ஊதினான்!” என்று அந்த இசையைத் தேக்கிக் கொண்டு நிற்கின்ற இளமங்கையரில் சிலர் மயில்களைப் போலக் கண்ணைப் பறிக்கும் உருவமுள்ள வர்கள்; சிலர் மான்களைப் போல் மருண்டு மருண்டு பார்க்கும் பார்வையிலே ஆழங்காண முடியாத அழகை மறைத்து வெளியிடுபவர்கள்; இப்போது இவர்கள் யாவரும் தங்களையும் தங்கள் திருமேனி அழகுகளையும் மறந்து கண்ணன் குழலோசையுடன் ஒடுங்கி ஒன்றிப் போயுள்ளனர். சிறிது நேரத்திற்கு முன்னர்தான் தம் இல்லங்களில் பூக்களால் தங்களை அணிசெய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூந்தல்கள் அவிழ்ந்து தொங்குகின்றன. ஒடி வந்த