பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் வேணுகோபாலன் 171. புவியுள்நான் கண்டதோர் அற்புதம் கேளிர் (3.6:7) என்று சொல்லி ஒரே வவையில் விண்ணும் மண்ணும் கட்டுண்டு கிடக்கும் அற்புதத்தை விளங்க வைக்க முயலு: கின்றார். நாமும் நம் மனத்திரையில் வானோர் யாவரும் ஆய்ப்பாடியில் வந்து திரண்டிருப்பதையும் கூட்டத்தின் மிகுதியால் ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டு நின்று அக்குழலோசையைத் தம் செவிகளால் பருகிய வண்ணம் அக்கண்ணபிரான் செல்லும் இடங்களுக்கெல்லாம் தாமும் பின் தொடர்ந்து அவனை நொடிப் பொழுதும் விட்டகலாமல் இருப்பதைக் கண்டு மகிழ்கின்றோம். இதுவும் ஓர் அரிய காட்சி. இப்பாசுரத்திற்கு, செவிக்கு நாவுண்டோ என்னில்: செவியுணா நீட்ட" என்னக் கடவதிறே; சேதத மாதியாலே சொல்லுகிறது; அன்றிக்கே, செவிக்கு உணவாயிருந்துள்ள இனிதான கானரசத்தைப் புசித்து. என்னவுமாம்; செவிக் குணவு இல்லாத போழ்து' (குறள்-412 என்றானிறே" என்ற சீயர் உரையும் சுவைத்து மகிழத்தக்கது. கண்ணனின் கானமிழ்தம் தம் செவியில் பட்டதும் நிலைத்திணைகளும் இயங்கு திணைகளும் பெருமாற்றங் களை அடைகின்றன. கோவிந்தன் குழலூதிக் கொண்டு நிற்கும் பக்கங்கள் பல. அந்த இசையைக் கேட்டவுடனேயே ஒரு பக்கத்தில் மரங்கள் மகரந்த தாரைகளைப் பெருக்கு கின்றன; வேறொரு பக்கத்தில் மலர் மாரிகளைப் பெய்கின்றன; வேறொரு பக்கத்தில் அவை கிளைகளைத் தாழ்த்தி நிழலை விளைவிக்கின்றன; தம்மில் தாமே உருகியும் நிற்கின்றன; அஞ்சலி பண்ணுவதுபோலக் கொம்புகளைக் கூப்பா நிற்கின்றன. அவன் நிற்கும் பக்கங் களையெல்லாம் நோக்கி இங்ங்னம் வழிபாடுகள் நடித்து. கின்றன. *"