பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆72 விட்டு சித்தன் விரித்த தமிழ் மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்; மலர்கள் வீழும்; வளர்கொம்புகள் தாழும்: இரங்கும்; கூம்பும்; திருமால் கிற்கின்ற பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே (3.6:10) (மது.தேன்; கூம்பும்-குவிக்கும்.1 என்று பேசுவார் ஆழ்வார். இது மற்றோர் காட்சி. குழலிசையினைக் கேட்ட பறவைகளின் செயல்கள் இவை: பறவைகள் தாம் இருக்கும் கூடுகளை விட்டோடி வந்து, காட்டில் வெட்டி வீழ்த்தப் பெற்ற,கிளைகள் போல் ஆடாது அசையாது நிலத்தில் விழுந்துகிடக்கின்றன. அங்கனமே வயிறார மேய்ந்து விட்டு வந்த பல பசுக் கூட்டங்களும்மெய் மறந்து கால்களைப் பரப்பிக் கொண்டும் தலையைத் தொங்க விட்டுக் கொண்டும் உணர்வற்ற பொருள்கள் போல் திகைத்து நிற்கின்றன. செவியையும் அசைக்க முடியவில்லை; அசைத்தால்கூட இசையை அதுபவிப்பதற்குத் தடையாகும் என்ற எண்ணம் போலும்! பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்ட கில்லாவே (3.6:8) (கனங்கள்.கூட்டங்கள்; படுகாடு.வெட்டி விழுந்த காடுகள்; கறவை.பசுக்கள்; கவிழ்ந்து.தொங்க விட்டு.1 என்று பேசுவர் ஆழ்வார். இப்படியும் ஒரு காட்சி. காளமேகம் போல நின்று கான மழையைப் பொழி கின்றான் கண்ணன். சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டன போல், தலைமயிர் இருண்டு சுருண்டு விளங்குகின்றது. இந்த முகமலரிலிருந்து குழலின் வழியாகப் பெருகி வரும் கீதம் இன்னும் எப்படிப்பட்ட வினோதமான சுவைஞர்களை அழைத்து வருகின்றது: பாருங்கள்: