பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் வேணுகோபாலன் 173. திரண்டெ முதழை மழைமுகில் வண்ணன் செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊது கின்ற குழலோசை வழியே, மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்தபுல் லும்கடை வாய்வழி சோர இரண்டுபா டும்துலுங் காப்புடைப் பெயரா எழுதுசித் திரங்கள் போலகின்றனவே! (3.6:9). (முகில்-மேகம்; மலம்-தாமரை, மான்கணங்கள். மான் கூட்டங்கள்; மருண்டு-அறிவழிந்து; இரண்டு பாடும்.முன்னும் பின்னும்; துலுங்கா.அசையாமல்1 மனிதர் காட்டு வழியில் அகப்பட்டுக் கள்ளர் கையில் அடியுண்டு அறிவழியப் பெறுதல் போல், மான் கணங்கள் இக்குழலோசையாகின்ற வலை வைத்த வழியிலே அகப்பட்டு சுவையநுபவத்தினால் மெய் மறந்து அறிவழிந்து போகின்றன; மென்று தின்பதற்காக வாயில் கவ்வியிருந்த புற்களும் உறங்குகின்றவன் வாய்ப்பண்டம் போல் தன்ன டைவே கடைவாய் வழியாக வெளியில் நழுவி விழுகின்றன; அதுவுமின்றி, நின்றவிடத்தில் நின்றும் ஒரு. மயிரிழையளவும் அசைய மாட்டாமலும் திகைத்து நிற் கின்றன. இப்படி ஒரு காட்சி. விருந்தாவனம் எங்கும் செவிகளாய்க் கண்ணனின் வேணுகானத்தை கேட்டுக் கொண்டுள்ளது. எங்கும் கண்களாய் அவனது அழகைப் பருகிக் கொண்டுள்ளது. அந்த அழகும் குணமும் கீதமாக ஒடி இயற்கை எல்லா வற்றையும் தன் வயமாக்கி விடுகின்றன! நாக்கின் சுவையைச் செவியிலே பிறப்பித்துப் பகுத்தறிவில்லாத பிராணிகளையும் வசீகரித்து விடுகின்றது. உயிர்க் குலத்தைச் சகோதர தர்மம்' என்னும் தெய்வீக பாசத் தால் பிணித்து விடுகின்றது அன்புக் கண்ணனது அருட்கீதம். சராசரங்களையெல்லாம் ஒருங்கே தழுவி அருள் செய்,