பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 177 வதரியிலிருந்து தெற்கே திருக்குறுங்குடி வரையிலுள்ள எண்பத்தாறு திவ்விய தேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின்மீது பாடியுள்ளார். இவற்றுள் பெரி யாழ்வார் சில திவ்விய தேசங்களை முழுப் பதிகங்க ளாலும் சிலவற்றை உதிரிப் பாசுரங்களாலும் மங்களா சாசனம் செய்துள்ளார். இவற்றைக் காண்போம். முழுப் பதிகங்கள் : இந்த ஆழ்வார் முழுப் பதிகங் களாக மங்களா சாசனம் செய்துள்ளவை : 1. திருக் கோட்டியூர், 2. திருவெள்ளறை, 3. திருமாலிருஞ் சோலை, 4. திருவரங்கம், 5. கண்டம் என்னும் திருப்பதி ஆகியவையாகும். இவற்றை ஒவ்வொன்றாக அதுபவிப் போம். 1. திருக்கோட்டியூர் : இத் திவ்விய தேசம் முத்து ராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் திருப்பத்துரர் வட்டத் திலுள்ள சிற்றுார். இந்த ஊர் எம்பெருமான் இரண்டு பதிகங்களால் (1.2; 4.4) மங்களா சாசனம் செய்யப் பெற்றுள்ளார். முதல் பத்து இரண்டாவது திருமொழி (1.2) திருக்கோட்டியூர் பற்றியது என்பதை, செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தமை பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே (1.2:10) என்ற பல சுருதிப் பாசுரத்தால் தெளிவாகும். இந்த ஊர் எம்பெருமான் செளமிய நாராயணனைச் சேவிக்கும் போது அவன் கண்ணனாகக் காட்சியளிக்க, ஆழ்வார் உடனே அந்த அவதார சேஷ்டிதங்களில் ஈடுபட்டுப் பாசுரங்கள் அருளிச் செய்து இனியராகின்றார். இத் திவ்விய தேசத்தில் மூன்று த ள த் தி ல் எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர். முதல் தளத்தில்

  • 1965 - செப்டம்பரில் சேவித்தது (என் இளைய மகனுடன்). -

வி.12