பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 விட்டு சித்தன் விரித்த தமிழ் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருப்பாற்கடல் நாதன்; இவர் சயனத் திருக்கோலத்தில் ேச ைவ சாதிக் கின்றார். இவர் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடல் வெண்மை நிறமுடையது. அதன் மீது அவருக்குப் படுக்கையாக இருக்கும் ஐந்து தலை அனந்தன் தங்க நிறமுடையவன். அரவணையின்மீது அறிதுயில் கொண்டிருப்பவர் நீலமணி போன்றவர். இவர் தேவர் களின் நடுவிலிருந்ததால் ஸ்தித நாராயணன்' என்ற திருதாமத்தால் வழங்கப் பெறுவர். அனந்தன் மீது சயணித் திருப்பதால் இவரைப் பெரியாழ்வார் உரக மெல்லணை ஆான் என்று மங்களா சாசனம் செய்கின்றார். உரகமெல்லனை யான்கையிலுறை சங்கம்போல்மட அன்னங்கள் நிரைகணம்பரங் தேறும்செங்கம லவயல்திருக் கோட்டியூர் நரகங்ாசனை நாவிற்கொண்டழை வாதமானிட சாதியர் பருகும்ருேம் உடுக்கும்கூறையும் பாவஞ்செய்தன. தாங்கொலோ (4.4:4) (உரகம் - பாம்பு நிரைகணம் . திரளான கூட்டம்; பரந்து . பரவி; நரகநாசன் - எம்பெருமான்; கூறை , ஆடை) என்பது பாசுரம். இவர் மூலவர். உற்சவர் - திருவிழா நாயகர் - செளமிய நாராயணன். இவருக்கு மாதவன் என்ற திருநாமமும் உண்டு. நித்திய உற்சவர் குளிர்ந்துறை கோவிந்தன்' என்பது ஆழ்வாரின் மங்களாசாசனம், நரகதாசன்” என்று மங்களாசாசனம் செய்யப் பெற்றவரே பலிபேரர் (வேள்வி மூர்த்தி). 4. பெரியாற். திரு. 4.4:8 5. டிெ, 4.4:9