பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 179 நடுத்தளத்தில் இருப்பவர் கின்ற நாராயணன்; இவர் பெரிய பிராட்டியாருடனும் பூமிப்பிராட்டியாருடனும் சேவை சாதிக்கின்றார். இப்பெருமான் நின்றரும்பி என்றும் உபேந்திரன் என்றும் திருநாமம் பெறுவர். இந்தத் தளம் இந்திரலோகம். இந்தத் தளத்தில் மூலைக்கு இரண்டாக எட்டு விமானங்களின் உட்கூடும் காணப்பெறுகின்றது, மேல்தளம் பரமபதம் என்ற திருநாமம் பெறுகின்றது. இங்கு, பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் இருபுறமும் இருக்கும் நிலையில் பரமபதநாதன் வீற்றிருக்கும் திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். 2. திருவெள்ளறை": இது திருச்சி - துறையூர் நெடுஞ் சாலையில் உள்ளது. சாலையிலிருந்து திருவெள்ளறைக்கு ஒரு கிளைச்சாலை உள்ளது; கைகாட்டியும் வழிகாட்டி நிற்கின்றது. ஒன்றரை கி. மீ. தொலைவு நடந்து சென்றால் இத் திருத்தலத்தை அடையலாம். திருக்கோயில் சுமார் 100 அடி உயரமுள்ள ஒரு சிறு குன்றின் மீதுள்ளது. வெள்ளறை - வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை - பாறை). இத் திருத்தலம் உய்யக் கொண்டார், எங்களாழ்வான் இவர்களின் பிறப்பிடம். பெரியாழ்வார் ஒரு திருமொழியால் (2.8) மங்களாசாசனம் செய்துள்ளார். இந்தத் திருத்தலத்தில் அர்ச்சையாய் எழுந்தருளி பிருக்கும் எம்பெருமானைக் குழந்தைக் கண்ணனாகப் பாவித்து யசோதைப் பிராட்டி அக்குழந்தையை நீராட்டிக் குழல்வாரிப் பூச்சூட்டின பிறகு அவனுக்குப் பிறர் கண் ணெச்சில் வாராதபடி காப்பிடக் கருதியவள் அவனை அந்தி வேளையில் காப்பிட்ட படியை ஆழ்வாரும் அநுபவிக்க எண்ணி தம்மை அப்பிராட்டியாகப் பாவித்து அவள்

  • 1965 - செப்டம்பரில் என் இளைய மகன் எஸ். இராமகிருஷ்ணனுடன் (இப்போது டாக்டர் இராம கிருஷ்ணன் M. 0. ஆக கேரளத்தில் பத்தளம் என்ற இடத்தில் பணியாற்றுபவன்) சே க்தது. - *