பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அதுபவம் 185 கடலுக்குத் தலைவனான மாறனால் கொண்டாடப் பெற்ற மலை (7). அறுகால் சிறுவண்டுகள் அதிகாலையில் அழகரின் ஆயிரம் திருநாமங்களை ஆளத்தி வைத்துப் பாடும் இடம் (8). எம்பெருமானின் திருப்பவளத்திற் கொப்பாக கண்டவிடமெங்கும் சிதறிப் பறக்கப் பெற்ற தாழ்வரையையுடையது இம்மலை (9). கண்டபடி திரியும் பெண்யானைகள் இரவில் ஆண்யானைகளுடன் புணர்ந்து களித்துத் திரியும் மலை (10). இம்மலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? பிராணிகளை அலைக்கழித்தும் அவற்றை அஞ்சும்படி செய்தும் கொன்றும் திரிந்து கொண் டிருந்த அரக்கர்களை பூண்டோடு அழியும்படி செய்த இட்சுவாகு வமிசத்துக்கு விளக்காய் நிற்கும் பெருமாள் (1). வலிய ஆண்மையுடையவனும் சங்கரனிடம் வாளைப் பெற்றவனுமான இராவணனுடைய தலைகளையும் அவனு டைய தங்கை சூர்ப்பனகையின் மூக்கையும் அறுப்புண்டு போகச் செய்தவன் (2). கருணையில் எம்பெருமானை -ஒத்தவர்களும் அவனிலும் மேம்பட்டவர்களுமான மகாத் மாக்களை வருத்தும் கொடியவர்களை எமபுரிக்கு அனுப்பு கின்றவன் (3). ஆண்டுதோறும் இடையர்கள் கூடி இந்திர னுக்கு எடுக்கும் விழாவை அவனுக்குச் சேரவொட்டாமல் கோவர்த்தன மலைக்குச் சேரும்படி செய்த வித்தகன் ..(4). பொய்கைக் கரையில் கஜேந்திராழ்வானின் கைங் கரியத்தை ஏற்றவன்; கம்சனுடைய குவலாயாபீடம் என்ற யானையை முடித்தவன் (5). கம்சன் ஏவின சானுரரன் முஷ்டிகன் என்ற மல்லர்களை நொறுக்கித் தள்ளியவன். கூனியிட்ட சாந்தை அணிந்து கொண்ட திருத் தோள்களையுடையவன் (6). குருநாட்டு மன்னர்கள் குழம்பும்படிப் பாண்டவர்கட்குத் து ைண ய க த் தேரோட்டி நீர் நரம்பில்விட்ட வருணக்கணை வழியே உண்டான நீரைக் குமிழி யெழச் செய்து குதிரைகட்கு நீருட்டிப் புரட்டி எழுப்பிக்கொண்டு சென்ற வித்தகன் (7).