பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 விட்டு சித்தன் விரித்த தமிழ் திருமலையை அணுகாத அரசர்களை கடும்.வெயில் காயும் காட்டில் சிற்றடி வழியாக ஒட்டி வெற்றி கண்டவன் (8). நாத்திகர்களைக் கண்டால் அவர்களின் உறுப்புகள் சிதறும்படி அடித்துக் கொன்று அவர்களின் உடலினின்று புறப்படும் சிவந்த குருதியைக் கொண்டு மாலை நேரத்தில் எம்பெருமானுக்கு ஆராதனமாகச் சமர்ப்பிக்கும் வைணவ பூதங்கள் சேவிக்கும் இடம்; எம்பெருமானும் எழுந்தருளி யிருக்கும் இடம் (9). எண்ணிலடங்காத தேவிமார்கள் எட்டுத் திக்குகளிலும் திகழ அவர்களின் நடுவே பெருமை தோற்ற எழுந்தருளியவன் (கண்ணபிரான்) (10). அடுத்த திருமொழியும் (4.3) இத்தகைய வார்ப்பிலே அமைந்தது. சோலை மலை எப்படிப்பட்டது? திரு. மாலிருஞ் சோலை மலையிலுள்ள கொன்றை மரங்கள் நரம்பும் இதழுமாகப் பூக்களைச் சொரிகின்றமை முறிந்த பொன் மோதிரங்களையும் பொற்காசுகளையும் வாரி வழங்கும் வள்ளல்கள் போன்றவை (1), மலையிலுள்ள மலைப்பாம்பு முழுமதியத்தைப் பார்த்து அதனைத் தனக்கு நல்ல உணவாகக் கருதிப் படமெடுத்துக் கிளர்ந்து கிட்டிச் சிவந்த ஒளியையுடைய சிவந்த நாக்கினால் அளையும் (மலையின் உயர்ச்சியைக் காட்டியவாறு) (2). புன்னை, சுரபுன்னை, வேங்கை, கோங்கு மரங்கள் மலர்களால் நிறைந்து ஒழுங்குபட நின்று அந்த மலைக்குப் பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே இருக்கும் (3). குறமாதர்கள் இடையர்களுக்குள் கோவிந்த நாமம் பெற்றவனைக் குறிஞ்சிப் பண்ணோடு கூடின பாட்டுகளை இசையுடன் பாடிக் கூத்தாடுவர் (4). பாடுவதற்காகப் பிறந்த வண்டுத் திரள்கள் பண்கள் பாடிக் கொண்டு. தேனைப் பருகுவதற்குப் பாங்காகச் சோலைகள் வாடாமல் வரை ஊற்றுகளையுடையது (6). ெபா ன் க ைள க் கொழித்துக் கொண்டு வரும் தெளிந்த அருவிகளில் மக்கள் திரள் திரளாக வந்து சூழ்ந்து கொண்டு நீராடுவர் (7). தேவர்களும் அவர்களின் தலைவனான இந்திரனும்,