பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அர்ச்சாவதார அதுபவம் 1872 இரவும் பகலும் திரியும் சந்திர சூரியர்களும் வலம் வந்து கொண்டிருப்பர் (8). பல்லாயிரம் சுனைகளும் பல்லா யிரம் தடாகங்களும் பல்லாயிரம் பூஞ்சோலைகளும் நிறைந்தது (10). இந்த மலையில் ேக ா யி ல் கொண்டிருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? உருக்குமினிப் பிராட்டியைத் தன் தேரில் கொண்டு போகும்போது அத்தேரைத் தொடர்ந்து ஓடி உருக்குமன் என்பவனை எட்டிப் பிடித்துத் தேர்த்தட்டில் இருத்தி அவமானப் படுத்திய மிடுக்கையுடையவன் (1). கஞ்சன், காளியன், குவலயாபீடம், இரட்டை மருதமரம், அரிஷ்டாசுரன் - இவர்களுடைய வஞ்சனையாலேயே தாம் தாம் முடியும்படி செய்த வித்தகன் (2). நரகனைக் கொல்லும் வகைகளை ஆராய்ந்து அவனைத் தப்பிப் போக முடியாதபடி வளைத்துக் கொண்டு திருவாழியாலே நிரசித்து, அவன் சிறையில் அடைத்து வைத்திருந்த பதினாயிரத்தொரு கன்னியர்களை ஆட்கொண்ட தீரன் (3). மாவலின் மகன் வாணனுடைய மகள் உஷை இருந்த சிறைக்கூடத்தை அரணோடே அழித்த சூரன் (4). காதில் கேட்க முடியாதபடி திட்டிக் கொண்டிருந்த சிசுபாலனுக்கு இறுதிக் காலத்தில் தன் அழகைக் காட்டி பகைமையைப் போக்கிய புண்ணியவான் (5). பாண்டவர்களின் மனைவியாகிய திரெளபதியின் மனக் குழப்பத்தையெல்லாம் திருவுளத்திற் கொண்டு அவள் அவமானப்பட்டபோது அத்துன்பங்களை யெல்லாம் நூற்றுவர் மனைவியரின் மீது சுமத்திய அற்புதன் (6). இவ்விடத்தில் சுமார் 40 ஆண்டுகட்கு முன் ஒரு காலட்சேபத்தில் கேட்ட நிகழ்ச்சியை நினைவு கூர் கின்றேன். நிகழ்ச்சி : துச்சாதனன் திரெளபதியின் துகிலுரி. கின்றான். வண்ணப் பொற்சேலைகள் வளர்கின்றன. பாகவதர் கூறுகின்றார்: காலி டெக்ஸ்டைல்ஸ், அரவிந்த் டெக்ஸ்டைல்ஸ்......... இப்படிப் பல ரக டெக்ஸ்டைல்ஸ்