பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அதுபவம் 191, வாக்கு ஈண்டு அநுசந்திக்கத் தக்கது. கருவறையிற் கிடந்த அன்று முதற்கொண்டே உனக்குப் பணி செய்யவேண்டும் என்று பேரவாக் கொண்டிருந்தேன். பிறந்த பிறகு நெடு நாள் சம்சாரத்தில் அழுந்தி நின்று அநுபவத்தை இழந் திருந்தேன். தெய்வாதீனமாக இன்று இத்திருமலையைக் கிட்டி உன்னைக் காணப் பெற்றேன். இனி உன்னை விட்டு ஒருநாளும் பிரியேன். (9). 4. திருவரங்கம் : சோழநாட்டுத் திருப்பதிகளுள் இது தலையாயது. வைணவர்களால் கோயில் என்றே வழங்கப் பெறுவது. திருச்சியிலிருந்து 4 கி. மீ. தொலைவி லுள்ளது. திருச்சியிலிருந்து எல்லாவித வாகன வசதிகளும் கிடைக்கும். தி ரு வ ர ங் க ம் பெரிய நகரமாதலின், சத்திரங்கள், தங்கும் விடுதிகள், இராமநுச கூடங்கள் முதலியவை இங்கு உள்ளன திருத்தலப் பயணிகள் ஏதாவ தொன்றில் தங்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்தத் திவ்விய தேசத்தைப் பெரியாழ்வார். முன்று திருமொழிகளால் (4.8; 4.9; 4.10) மங்களாசாசனம் செய்துள்ளார். வழக்கம் போல் இந்த ஆழ்வார் பாசுரங் களின் முதல் இரண்டு அடிகளில் எம்பெருமான் பெருமை யையும், இறுதி இரண்டு அடிகளில் திவ்விய தேசத்தின் வளத்தையும் சிறப்பித்துப் பேசுகின்றார். முதலில் ஊர் வளத்தைக் காண்போம். கங்கையிற் புனித மாய காவிரியில் (திருமாலை.23) பெரியபெருமாளின் திருக்கண்

  • 1948 ஜூன் மாதத்திலும், 1969 ஜூன் மாதத்திலும் அதன் பிறகு பல முறையும் சேவிக்கும் பேறு பெற்றேன். ஒரு முறை வசந்தோற்வத்தின்போது திரு. R. கிருட்டின சாமி ரெட்டியார் (சிதம்பர விலாஸ் பேருந்து) என்னைச் சேவிக்க வைத்தது நினைவிற்கு வருகின்றது.

7. பெரிய பெருமாள்-அரங்கநாதன்; பெருமாள்இராமன்; இளைய பெருமாள்-இலக்குவன்; பிள்ளைப் பெருமாள்-குழந்தைக் கண்ணன்.