பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 விட்டு சித்தன் விரித்த தமிழ் நோக்கான திருமுகத்துறை முதலான பல துறைகளில் வைணவப் பெருமக்கள் திரள் திரளாகக் குடைந்து நீராட, அதனால் அக்காவிரி முழுவதும் அலை மோதப் பெறு: கின்றது. அந்த அலைகளினால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைக்கப்பட, அதனால் அப்பூக்களினின்றும் தேன் பெருக, அத்துடன் சேர்ந்த தீர்த்தத்தை உடையது. (1), முத்தி வளர்த்து ஒம்பும் வைதிகர்களும் செல் விருந். தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் வைணவர்களும் வாழும் ஊர் (2). திருவரங்கத்தைச் சூழ்ந்து பெருகும் காவிரி நீரில் பெரிய பெருமாள் திருமுகம் போன்ற செந். தாமரை மலர்களும், அவரது திருமேனி போன்ற கரு. நெய்தல் பூக்களும் ஒன்றுக்கொன்று எதிர்நோக்கி மலரும்: இடம் (3). தேன் மாறாத மலர்களையுடைய சோலை களையுடையது (4). இச்சோலையை, வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை, கொண்டல்மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை, அண்டர்கோன் அமரும் சோலை. (திருமாலை-14) என்று வருணிப்பர் தொண்டரடிப் பொடிகள். இந்த ஆழ்வாரும், குரவ மலர்கள் அரும்பு விட்டு நிற்கவும், கோங்கு மரங்கள் அலரா நிற்கவும், குயில்கள் களித்துக் கூவும்படியாகவும் உள்ள சோலைகளால் சூழப்பட்ட ஊர் என்பர் (5). - செவிக்கினிய பண்ணையுடைய வண்டுகள் திரள் திரளாகக் கூடி மலரும் நிலையிலுள்ள தாழை மடலினுள் உரசிக் கொண்டு புகுந்து, அங்குப் புரண்டு, அதிலுள்ள வெண்ணிறச் சுண்ணங்களை தம் உடலில் பூசிக் கொண்டு (சிவனடியார்கள் போல!) தென்னதென. என்று ஆளத்தி வைத்துப் பாடுகின்றன (6). ஒரிருவரால் தழுவ (էԲէգ.աո 5. பெரிய சந்தன மரங்களை பெரிய மலைகளினின்றும்,