பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 393 வேருடன் பிடுங்கி இழுத்துக் கொண்டு வந்து இவற்றைத் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று இரப்பதுபோல் இரைச்சலிடும் காவிரி தான் கொணர்ந்த மணப் பொருளை பெரிய பெருமாளுக்குச் சமர்ப்பித்துத் திருவடிகளை வருடுவதுபோல் தொழுகின்றது (7). பெரிய சிறகுகளை யுடைய வண்டுகள் மாலைப் பொழுதில் எம்பெருமான் திருக்குணங்களைப் பாடிக் கொண்டு மல்லிகைப் பூவாகிய வெளுத்த சங்கை ஊதி நிற்கும் இடம் (81. இவ்விடத்தில், மல்லிகையே வெண்சங்கா வண்டுத வான்கரும்பு வில்லி கணைதெரிந்து மெய்காப்ப-முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது.” என்ற புகழேந்தியின் நளவெண்பாப் பாடல் நினைத்தல் தகும். அழகுக் கடவுளின் முழுமை நிறைந்த அவதாரம் என்று கண்ணனைப் போற்றுகின்ற ஆழ்வார், குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல் நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமால்' (கொழுமுகில் நீர் நிறைந்த மேகம்; குவளை.நீலோற் பலம்; குரை.ஒலிக்கும்; கணமயில்.மயில் கூட்டம்) என்றவாறு அப்பெருமானை இயற்கை எங்கும் காண்கின் றார். விண்ணிலும் மண்ணிலும் காண்கின்றார்; காட்டி 2. நளவெண்பா.99. 3. பெரியாழ். திரு. 4,8:9 வி. 13