பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 விட்டு சித்தன் விரித்த தமிழ் லும் நாட்டிலும் காண்கின்றார்; குன்றிலும் கடலிலும் காண்கின்றார்; பூவிலும் மயிலிலும் காண்கின்றார். இத்தகைய இயற்கை அழகு நிறைந்த ஊர்தான் திருவரங்கம் என்பது இவர்தம் கொள்கை. குன்றுண்டு பொழில்நுழைந்து கொடி இடையார் முலைஅணவி மன்றுண்டு தென்றல்உலாம் மயில் அரங்கம் என்பதுவே.4 |பொழில்-சோலை; கொடி இடையார்-கொடிபோன்ற இடையையுடைய மகளிர்; அணவி-படர்ந்து) என்ற அடிகளில் இக்கொள்கை வெளிப்படுவதைக் கண்டு மகிழலாம். தென்றல் உலவுவதை அற்புதமாகச் சித்தி ரிக்கும் அழகு எண்ணி எண்ணி அநுபவிக்கத்தக்கது. இத்திருமொழியில் நுவலப்பெறும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? சாந்தீயினியின் புத்திரனைக் கடவி லிருந்து மீட்டுக் கொடுத்தவன். (1) பிறந்த இடத்திலேயே மாண்டொழிந்த வைதிகனின் நான்கு பிள்ளைகளையும் தேடிக்கொணர்ந்து கொடுத்தவன்" (2). பண்டு பாரதப் போரில் பாண்டவர்களின் பட்சபாதியாக இருந்து அவர் கட்கு யாதொரு நலிவும் நேராதபடி காத்தருளியவன் (3). பணிப்பெண் மந்தரையின் சொற்களைக் கேட்டு கைகேயி தசரதன் சம்பராசுரனுடன் நடத்திய போரின் போது கொடுத்த வரத்தைப் பொருத்தமாகக் கேட்க, அவற்றின்படி தாயரையும் அரசையும் துறந்தவன் (4). கடவுளரிடம் பெற்ற வரங்களினால் தருக்குடன் பல அக்கிரமங்களைப் புரிந்த இராவணனைக் கொன்று உலகத்தை வாழ்வித்தவன் (5). கீழுலகத்திலுள்ள அசுரப் 4. டிெ - 4.8:9, 5. வைணவ உரை வளம் - பாசுரம் 4.பக் 29, б. டிெ - பாசுரம் 1.பக். 24.