பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அதுபவம் 195 பூண்டுகள் கிளம்பவொண்ணாதபடி அழித்தவன்; பகைவர் களைத் தொலைத்தலையே இயல்பாக உடையவன் (6). பிறருக்குத் தீங்கு இழைப்பதையே தொழிலாக வுடைய அசுரர்களின் செங்குருதி நிலத்தில் பரவிக் குமிழியிட்டு அலை யெறியும்படி அவர்களைப் பிணமாக்கியவன் (7), வராக மாய் அவதரித்துப் பூமியையும் நரசிங்கமாய் அவதரித்து இரணியனையும் கீண்டருளினவன் (8). இராமகிருஷ்ண அவதார சேஷ்டிதங்களால் திருஅரங் கத்தை அநுபவித்த ஆழ்வார் மனநிறைவு பெறாமல் மீண்டும் ஒரு திருமொழியால் இத்திருப்பதியை அநுபவிக் கின்றார். இத்திருமொழியும் முன் திருமொழி போன்ற வார்ப்புடையது. இறுதி இரண்டு அடிகளில் காட்டப்பெறும் திவ்விய தேச வளத்தைக் காண்போம். பெரிய பெருமானின் திருமேனி நிறம், பெரிய பிராட்டியாரின் திருக்கண்களின் நிறம் இவற்றையொத்த அழகு பொருந்திய கருநெய்தற் பூக்கள் காற்றால் அசைந்து கொண்டிருக்கும் இடம் திரு வரங்கம் (1). திருவரங்கத்தைச் சூழ்ந்துள்ள திருக்காவிரியில் எம்பெருமானது திருஉந்திக்கமலம் போன்ற பல தாமரை மலர்கள் ஓங்கி விளங்குகின்றன. இவற்றோடொத்த அழகிய பூக்கள் பிற இடங்களில் இல்லை (4). அன்னம் முதலிய பறவைகள் நீர்ப்பூ முதலிய பூக்களில் பொருந்தி யிருந்து தங்கள் சாதிக்குத் தலைவனான பெரிய திருவடியின் புகழைச் சொல்லினால் வரும் சுவை தோன்றப் பேசா நிற்கப்பெற்ற இடம் (5). பச்சை மாமலைபோல் மேனி யனான அழகிய மணவாளன் சாய்ந்தருளப் பெற்றமையால் அத்திருமேனியின் நிழலீட்டாலே கருத்துத் தோன்றுகின்ற திருவனந்தாழ்வானுடைய படங்களின் மீது செழுமணரிகள் ஒளிர்வது - ஒரு நீலமலையின் மீது பல இளஞ்சூரியர்கள் உதித்தாற்போல் தோன்றுகின்றது (7). செழிப்புப் பொருந்திய தாமரை மலர்கள் மேலுலகை அளப்பதாக உயர்ந்த திரிவிக்கிரமனின் திருவடி போல் உயர வளர்ந்து விளங்க, வரம்பு சேர்ந்து விளைந்து