பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 197 வனுமான எம்பெருமான் பெரிய பெருமாள் (2). இரட்டை மருத மரங்கள், குவலயாபீடம், பிரலம்பன், கேசி, சகடாசுரன், சானுரரன், முஷ்டிகன் என்ப வர்கள்-ஆகியோரை முடித்துப் புகழ்பெற்றவன் (3). துவாரகையில் பதினாயிரத்தொரு நூறு தேவிமார் கைங் கரியம் பண்ண அவர்களின் நடுவே நாயகனாய் வீற்றிருப் பவன் (4). கங்கையில் ஆமையாய், பிறகு கங்கையாய், ஆழ்ந்த கடலாய், பூமியாய், மலைகளாய், நான்முகனாய், நான்கு வேதங்களாய், யாகங்களாய், தானாய் அறிதுயில் கொண்டிருப்பவன் (5). பாண்டவர்களின் தேவி திரெளபதியின் விரித்த கூந்தலை முடிப்பித்து, அவர்களை அரசாள்வித்தருளி, உத்தரையின் சிறுவனை உயிர்பெறச்செய்து, எல்லா உயிர் கட்கும் தலைவனாக எழுந்தருளியிருப்பவன் (6). வாமன மாணியாய் எழுந்தருளி மகாபலியின் செருக்கை அடக்கி, அவனது பூமியைத் தன்னுடையதாக்கி, கனநேரத்திற்குள் பாதளத்தை அவனுடைய இருப்பிடமாக்கி இந்திரனுடைய குறையை முடித்தவன் (7), இரணியனை முடித்துப் பிரக லாதனுக்கு அருள்புரிந்த வித்தகன் (8). மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், தசரதராமன், பலராமன், கண்ணன், கல்கி-அவதாரங்கள் எடுத்துப் பல விரோதிகளை முடித்தவன் (9). பெரிய திருவடிக்குத் தலைவன்: லீலா விபூதியை ஆள்பவன்; நாந்தகவாளை யுடையவன்; நான்மறைகளை ஆள்பவன் புறமுதுகு காட்டாத சேனைகளையுடையவன்; வள்ளண்மைமிக்கவன்; இரவு, பகல் இவற்றுக்கு நியாமகன்: ஏழு உலகத்தையும் காப்பவன்; பெரிய பிராட்டியாரை ஆளுபவன் (10). மூன்றாம் பதிகத்தில் (4.10) சரம தசையில் கருமங் களுக்கேற்றவாறு யமகிங்கரர்கள் தன்னை நலியும்போது அந்த வருத்தத்தினால் எம்பெருமான் திருவடிகளை நினைக்கவும் ஒன்று சொல்லவும் இயலாத நிலை ஏற்படக்