பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 விட்டு சித்தன் விரித்த தமிழ் கூடுமாதலால், அப்போது சொல்லவேண்டியவற்றை தற்போதே சொல்லுகின்றார். எய்ப்பென்னை நவியும்போது அப்போது உன்னை நினைக்கவும் கூடாமல் போகும்; அதனால் அப்போது சொல்லவேண்டியவற்றை இப்போதே சொல்லுகின்றேன்: (1, 2). நின்திரு நாமங்களையெல்லாம் இப்போதே அநுசந்தித்துவிட்டேன்; இதுவே ஏதுவாக நீ காக்க வேண்டும் (3). இவ்வாறே எல்லாப் பாசுரங்களிலும் அருளிச்செய்து அஞ்சல்' என்று சொல்லித் தன்னைக் காக்கவேண்டும் என்று வேண்டுகின்றார். 5. கண்டம் கடிககர்: தேவப்பிரயாகை என்று இன்று வழங்கப் பெறும் இடமே கண்டம் கடிநகர். இது வதரிக்குப் போகும் வழியில் கடல் மட்டத்திற்கு மேல் 1700 அடி உயரத்தில் இமயமலையில் உள்ளது. வட நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. அரித்துவாரத்திலிருந்து 59 கல் தொலைவிலுள்ளது. இந்த இடத்தில்தான் விஷ்ணு கங்கையும் பாகீரதியும் ஒன்று சேர்ந்து கங்கையாக ஒடத் தொடங்குகின்றது. விஷ்ணு கங்கை என வழங்கும் அழங்கா கந்தா என்ற நதி அழகாபுரி என்ற இடத்திலும், பாகீரதி கங்கோத்ரியிலும் தொடங்குகின்றன. பூமியின் அடியிலிருந்து சரசுவதி என்ற நதியும் தேவப்பிரயாகையில் சேர்வதாக ஐதிகம். இதனால் இந்த இடம் திரிவேணி" என்றும் வழங்கப் பெறுகின்றது. கடிநகர் எம்பெருமானைப் - புருடோத்தமனைப் - பெரியாழ்வார் ஒரு திருமொழியில் (4.7:11 பாசுரங்கள்) மங்களாசாசனம் செய்துள்ளார். புருடோத்தமனை கீலமேகப் பெருமாள் என்று வழங்குவதும் உண்டு. நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார், தாயார் புண்டரீகவல்லி. பெரியாழ்வார் இப்பெருமானை,