பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 199. மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்ாகன் குடைய எம்புரு டோத்தமன் இருக்கை மூன்றடி கிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான் கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிககரே (4.7:10) (மூன்று எழுத்து-பிரணவம்; மூன்று எழுத்து ஆக்கி.அ உ ம ஆக்கி; ஏன்று கொண்டு.தஞ்சமாக நினைத்து அதுசந்தித்து, மூன்று அடிமூன்றுபதம்; கான்-நது நாற்றம்: தடபெரிய; பொழில்-சோலை 1 என்ற பாசுரத்தால் மங்களாசாசனம் செய்கின்றார். கண்டம் என்னும் கடிநகர் எங்குள்ளது? நறு நாற்றம் கமழும் பெரிய சோலைகளினால் சூழப்பெற்ற கங்கையின் கரைமேல் உள்ளது. அங்குக் கோயில் கொண்டிருப்பவர் யார்? புருடோத்தமன் என்ற திருநாமம் கொண்ட எம்பெருமான். அவன் தன்மை யாது? அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றெழுத்துகளை தன் சங்கற்பத்தினால் மூன்று வேதங்களினின்றும் தோற்றுவித்தவன்; இந்த மூன்று எழுத்துகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே எழுத்தாக 'ஓம்' என்ற பிரணவ மந்திரமாகச் செய்தவன்; இந்த மூன்று எழுத்துகளாலான பிரணவத்தை மூன்று சொற்களாய் மூன்று பொருள்க்ட்கு வாசகமாக இருக்கும் அகார, உகார, மகாரங்களான மூன்று எழுத்துகளாகப் பிரித்தவன்; இவற்றுள் அகாரம் சீவான்மாவுக்குள்ள பகவானுக்கு அடிமைத் தன்மையைக் (பகவத் சேஷத்துவம்) கூறுவ தாலும், உகாரம் தேற்றப் பொருளைக் கூறி அந்த அடிமைத் தன்மை பரமபத நாதனாகிய நாராயணன் பக்கலின்றி வேறு ஒருவர் பக்கல் வகிக்கத் தகாதது