பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்பதைத் தெளிவிக்கையாலும், மகாரம் ஞானத்தைக் கூறுவதாலும் இறைவன் ஒருவனுக்கே அடிமைப்பட்டிருத் தலுக்கு (அநந்யார்ஹ சேஷத்துவம்) உரிய ஆன்மா தேகத் தினின்றும் வேறுபட்டது என்பதைப் புலப்படுத்துவதாக இருப்பதாலும் இம்மூன்று எழுத்துகளையுமே தமக்குத் தஞ்சம் என்று கொண்டிருப்பவர்களின் பக்கல் தம் பேரருளைக் கிட்டச் செய்பவன்; பிரணவ பதத்தை நம: பதத்துடனும் நாராயண பதத்துடனும் கூட்டி இம் மூன்று பதங்களில் ஒம் என்பதில் இறைவன் ஒருவனுக்கே அடிமைப் பட்டிருத்தல் (அநந்யார்ஹ சேஷத்துவம்) என்ற நிலை யையும், நம: என்பதில் இறைவன் ஒருவனையே உபாய மாகப் பற்றியிருத்தல் (அநந்யார்க சரண்யத்துவம்) என்ற நிலையையும் நாராயணாய என்பதில் அவன் ஒருவனையே இனிய பொருளாகக் கொண்டிருத்தல் (அநந்ய போக்கியத் துவம்) என்ற நிலையையும் தோற்றுவித்தவன்; இவற்றிற்கு எதிர்த் தட்டாகத் தலைமை நிலையையும் (சேஷித்துவம்), தஞ்ச நிலையையும் (சரண்யத்துவம்), அடையப்படும் நிலையையும் (பிராப்யத்துவம்) கொண்டு திகழ்பவன். பாசுரங்கள் தோறும் கங்கையின் தன்மையும், எம்பெருமான் பெருமையும் நுவலப் பெறுகின்றன. ஏதேனும் ஒரு குளத்தில் ஒருவர் நீராடுகையில் கங்கை, கங்கை என்று உச்சரித்தாலே அவர்தம் பெருப்பெருத்த பாவங்களையெல்லாம் அழிக்கவல்லது கங்கை நதி (1): கங்கை முதலில் ஓங்கி உலகளந்த உத்தமனாகிய எம்பெரு மானின் திருவடியை நான்முகன் தன் கம்.ண்டல நீரால்' கழுவிப் பாத பூசை செய்ததனால் அவன் கையிலும் எம்பெருமான் திருவடியிலும் தொடங்கி, அந்த நீர் கங்கையாகப் பெருக்கெடுக்கும்போது அது பசுமை நிறமுடைய திருத்துழாயையும் பின்னர் அது சிவபெரு மானின் திருச்சடையில் தங்கி இழிந்ததால் கொன்றை மலரையும், மலை வழியாக இழிந்தமையால் பல்வேறு.