பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 201 இரத்தினங்களையும் கொண்டு ஓடுகின்றது (2, 3): இமய மலை முதல் கடலில் கலக்கும் வரையில் அதன் இருகரை களிலும் உள்ள உலக மக்கள் ஆரவாரித்துக் கொண்டு நீராடுவதனால் அவர்தம் பாவங்களையெல்லாம் போக்கும் பெருமையுடையது (4); நீராடுவோரின் எழுபிறப்புகளிலும் திரண்ட பாவங்களைக் கண நேரத்தில் போக்கும் தன்மையது (5); அருந்தவ முனிவர்கள் தாம் மேற்கொண்ட வேள்வி முடிந்த பிறகு, வேள்வியின் முடிவில் செய்ய வேண்டிய நீராடலைச் செய்ய (அவப்பிரதம் என்ற நீராடல்) அதனால் வேள்வி நிலத்திலுண்டான கலப்பை முதலிய எல்லாத் துணைக் கருவிகைளையும் அடித்துக் கொண்டு வரும் சீர்மையது (6); தேவேந்திரனின் பட்டத்து யானை யாகிய ஐராவதத்தின் மதநீரும், இளந்தேவமாதர்கள் நீராடுவதால் அவர்கள் அணிந்திருந்த சாந்தும், அவர்கள் தலையில் செருகியிருந்த கற்பகப் பூக்களும் ஒன்று சேர்ந்து வரும் நீரையுடையது (7); வேள்வி நிலத்திலிருந்து யாகப் பசுக்களைக் கட்டுந்தறிகளைத் (யூபஸ்தம்பங்கள்) திரள் திரளாக அடித்துக் கொண்டு வருகையில் யாகப்புகையையும் உட்கொண்டதால் அந்தப் புகையின் மணமும் கொண்டு இலங்குவது (8); சோலைகளின் வழியே வருவதால் பூக்களின் நறுமணமும் நீரில் கமழ்வது (10); மந்தரம் 6. நான்முகன் எம்பெருமானின் திருவடியைக் கழுவுங் கால் அந்த பூரீபாத தீர்த்தம் கங்கையாகப் பெருக்கெடுத்து ஆகாய கங்கையாக உம்பர் உலகில் நின்றது. சூரியகுலத் தோன்றலாகிய பகீரதன் என்ற மாமன்னன் கபில முனிவரின் கண்ணின் சினத்தீய்க்கு இலக்காகி உடலெரிந்து சாம்பராகி நற்கதி இழந்த அறுபதினாயிரம் சகரபுத்திரர்கள் நற்கதி பெறும் பொருட்டு நெடுங்காலம் தவமியற்றி, மேலுலகத்தி லிருந்து பூமிக்குக் கொணர்கையில் அவனது வேண்டு கோளால் சிவபெருமான் அந்நதியைத் தன் முடிமீது ஏற்றுச் சிறிது சிறிதாக பூமியில் விட்டனன் என்பது புராண வரலாறு.