பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 விட்டு சித்தன் விரித்த தமிழ் முதலிய மலைகள் சலிக்கும்படியாகவும், பூமி பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும், இரு கரையிலுள்ள மரங்கள் வேருடன் சாய்ந்து முறியும்படியாகவும், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படியாகவும் வெள்ளப் பெருக்கு இழியும் தன்மையுடையது (9). இதனால் பொங்கொலி கங்கை' என்று இதற்குத் திருநாமம் சூட்டுகின்றார் ஆழ்வார் (11). ஆழ்வார் எம்பெருமானின் பெருமையில் ஈடுபடுவ திலும் நாம் ஆழங்கால் படுவோம். வைணவ தத்துவங் களின் கருவூலமாகத் திகழும் எம்பெருமானின் சிறப்பை (10-வது பாசுரம்) மேலே கண்டோம். மேலும் இங்குக் காண்போம். இராமாவதாரம், திரிவிக்கிரமாவதாரம், பலராமவதாரம், கிருஷ்ணாவதாரம் என்ற அவதார எம்பெருமான்களும் அர்ச்சாவதாரமாக வேறு சில திவ்விய தேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களும் கண்டம் கடிநகர் புருடோத்தம எம்பெருமானாக இருந்து சேவை சாதிப்பதை ஆழ்வார் திருவுள்ளம் எண்ணிக் களிக்கின்றது. இக்களிப்பை எம்புருடோத்தமன் இருக்கை.கண்டம் என்னும் கடிநகரே " என்று பாசுரங்கள் தோறும் காணக் செய்கின்றார் ஆழ்வார். கண்டம் கடிநகரில் திருக்கோயில் கொண்டு சேவை சாதிக்கும் எம்பெருமான் சூர்ப்பணகையின் மூக்கையும் அவளுடைய அண்ணன் இலங்கை வேந்தன் இராவணனின் தலைகளையும் அறுத்தொழித்து அயோத்தி நகர் திரும்பிப் பதினாயிரம் ஆண்டு அரசாண்டு தன் புகழ் நிலவச் செய்தவன் (1): மாவலி கையில் நீரேற்று மூவடிமண்பெற்று உலகளக்கத் தொடங்கின போது சந்திர சூரியர்கள் இது வென் புகுந்தது இங்கு? அந்தோ!" என்றாற்போல அஞ்சி நடுங்கும்படி விம்மி வளர்ந்தோங்கி ஓங்கி உலகளந்தவன் (2). போர் செய்யும் எண்ணத்துடன் எதிர்த்து வந்த அசுரர்களின் தலைகளைப் பாஞ்சசந்நியத்தைத் திருப் பவளத்தில் வைத்து முழக்கியும், அழல் உமிழ் ஆழி