பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.204 விட்டு சித்தன் விரித்த தமிழ் இப்பாசுரப் பகுதியில் மதுரை, சாளக் கிராமம், வைகுந்தம், துவரை, அயோத்தி, வதரி என்று ஆறு திவ்விய தேசங் களின் பெயர்கள் இடம் பெறுகின்றன. சைவ நாயன் மார்களின் திருப்பதிகங்களிலும் தலத்துக்கு ஒன்று அல்லது பல பதிகங்களும், ஒரே பதிகத்தில் பல தலங்களை அடக்கியும் பாடும் மரபுகளைக் காணலாம். இவற்றை அவர்கள் ஊர்த் தொகை என்று வழங்குவர். மூவர் தேவாரங்களிலும் இவ ற் றி ற் கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இனி பெரியாழ்வார் குறிப்பிட்ட ஆறு தலங் களைப் பற்றியும் சிறிது அறிவோம். - 6. மதுரை (வட): சென்னை-தில்லி இருப்பூர்தி வழியில் ஒரு நிலையம்; தில்லியிலிருந்து முன்னதாகவே 170 கி. மீ. தொலைவிலுள்ளது. மதுரை நகர் நிலையத்திலிருந்து சுமார் 3. கி. மீ. தொலைவில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஒடும் யமுனை நதிக்கரையில் உள்ளது. இது கண்ணன் அவதாரம் செய்த திருத்தலம். முத்திதரும் நகரங்கள் ஏழினுள் இதுவும் ஒன்று. கண்ணுக்கு மதுரமா யிருத்தலாலும் மது என்ற அசுரனை அழித்த இடமா தலாலும் இதற்கு மதுரை என்று பெயர் வந்ததாகக் கூறுவர். பாசுரங்களில் வடமதுரை' என்று வழங்கப் பெறும் (4.7:9). யமுனைநதியின் தென்கரையில் திருத்தலப் பயணிகள் வசதியாக நீராடுவதற்கு நல்ல படித்துறையொன்று அமைக்கப்பெற்றுள்ளது. இங்குள்ள பண்டாக்கள் பொய்யும் புனைகருட்டுமாகக் கண்ணன் பிறப்பைப் பற்றிக் கூறும் செய்திகளை நம்பவேண்டியதில்லை. கண்ணனைப் பற்றிய பழங்கால இடங்கள் யாவும் இஸ்லாமியர்களின் L#ffff}Lயெடுப்பின்பொழுது அழிக்கப்பெற்றன. ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த திருக்கோயில்கள் ஒன்றுகூட இன்று இல்லை. பிற்காலத்தில் எழுந்த கட்டடங்களும் பாழடைந்து கிடக்கின்றன. கண்ணனுக்குரிய கேசவ தேவர்