பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 205, மந்திர் என்ற திருக்கோயில் இன்று இல்லை. அந்த இடத்தில் ஒரு மசூதி உள்ளது. இன்று இந்த மசூதியைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் ஒரு பெரிய கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் எழும்பி யுள்ளது. இங்குக் கண்ணனுக்குத் தனிக் கோயில் மிக அழகான முறையில் பளிங்குக் கற்களால் கட்டப்பெற் றுள்ளது. இக்கோயிலில் உள்ள கண்னனின் சிலை கண்டாரை ஈர்க்கும் பாங்கில் உள்ளது. இச்சிலை வடிவம் தான் ஆண்டாள் குறிப்பிடும் மாயன்; வடமதுரை மைந்தன்' என்று தினந்து வழிபடலாம். 7. சாளக்கிராமம் : இது நேபாளத்தில் காட்மாண்டு. என்னும் தலைநகருக்கு 60 கல் தொலைவில் மேற்குத் திசையில் கண்டகி நதிக்கரையில் உள்ளது. முக்தி நாராயணன் கோயிலுக்குப் போகும் வழியில் உள்ளது. குறுகிய மலையிடுக்குகளிலுள்ள ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் இத்திருத்தலத்தை அடைதல் வேண்டும். சிறுத்தைப் புலிகள் நடமாடும் இடம். இத் திருத்தலத் திற்குப் போகிறவர்கள் நேபாள அரசிடம் இசைவு பெறுதல் வேண்டும். 50 பேருக்குக் குறைவான எண்ணிக் கையுள்ள திருத்தலப் பயணிகட்கு இசைவு வழங்கப் பெறமாட்டாது. ஒரு பாசுரத்தால் (4.7:9) மங்களா சாசனம் செய்துள்ளார். 8. வைகுந்தம் : இதைத் திருநாடு' என்றும், 'பரமபதம்’ என்றும், நலம் அக்தம் இல்லதோர் நாடு’ (திருவாய் 2.8:4) என்றும், நித்திய விபூதி என்றும் வழங்குவர் வைணவப் பெருமக்கள். ஆழ்வார்கள் பெரு நிலம்", பெரு விசும்பு", உம்பர் உலகு". விண்ணகம்", * நாரணன் உலகு’, ‘இன்ப வீடு", அமரர் உலகம்", வானோர் கடிநகர் என்றெல்லாம் பன்னி உரைப்பர். 7. திருப்பாவை.5.