பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 விட்டு சித்தன் விரித்த தமிழ் இந்த விளக்கம் வைணவ ஆகமங்களிலும் வேறு வைணவ நூல்களிலும் நுவலப்பெறும் நித்திய விபூதி பற்றிய விளக்கத்துடன் ஒத்துள்ளது. இந்த உலகின் ஆனந்தம் அளவிறந்து ஒப்பற்றதாக இருக்கும் பான்மையது. இங்குத் திவ்விய கற்பகச் சோலைகள், நானாவித மலர்கள் நிறைந்த திவ்விய பூங்காக்கள், திவ்விய இளமரக்காக்கள், திவ்விய செங்குன்றங்கள், நீராடும் திவ்விய தடாகங்கள் முதலியவை நிறைந்து இருக்கும். இங்கு மிகவும் இடமகன்ற நிரதிசய ஆனந்தமயமான திருமாமணி மண்டபம் ஒன்று உண்டு, உபய விபூதியிலுள்ளவர்களும் ஒரு மூலையில் அடங்கும்படி யான மிக விசாலமானது. இங்குள்ள பொருள்கள் யாவும் சுத்த சத்துவத்தாலானவை. இங்குக் காலம் நடை யாடாது; காலை . மாலை, பகல் - இரவு, இன்று. நேற்று என்ற நிலைகள் இங்கு இல்லை. முன் . பின் என்ற நிலைதான் உண்டு, வீடுபேறு அடைவதற்கேற்ற உபாயங் களைக் கையாண்டு அவன் திருவருளைப் பெற்ற முமுட்க கள்தாம் இந்த நீள் விசும்பினை அடைதல் முடியும். இவர்கள் இப்பூவுலகிற்குத் திரும்பி வருதல் இல்லை. பிரளய காலத்தில் இவர்கட்கு அழிவு இல்லை. இறைவன் திருவுள்ளப்படி எந்த உருவத்தையும் இவர்கள் மேற் கொள்வர். பெரியாழ்வார் ஒரு பாசுரத்தால் (4.7:9) மங்களா சாசனம் செய்துள்ளார். 9. துவரை : இது துவாரகை, மேற்கிந்திய இருப் பூர்தி வழியில் ஜாம்நகருக்கும் ஒக்காவிற்கும் இடையிலுள்ள ஒரு நிலையம். எல்லா வசதிகளும் கொண்ட ஒரு சிறிய நகரம் (ஒக்காவிலிருந்து 18 கல் தொலைவிலுள்ளது). 8. Subbu Reddiar, N. Dr. Religion and Philosophy of Nalayiram with Special Reference to Nammalvar - P. 585. 9. இந்த உலகைப் பற்றிய முழு விவரங்களையும் வடநாட்டுத் திருப்பதிகள்-வைகுந்தநாதன் (14-வது கட்டுரை) .ః fశ7డ్ , -