பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii நூல் பதினான்கு இயல்களாக அமைந்துள்ளது. முதல் இயல் ஆழ்வாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக உரைக்கின்றது. அதனைத் தொடர்ந்து வரும் பதின்மூன்று இயல்களும் அருளிச் செயல்களைப் பல கோணங்களில் ஆய்வன. வைணவப் பெருமக்களுக்கு இந்நூல் நல்ல விருந்தாக இருக்கும் என்று கருதுகின்றேன். பொது மக்களும் இந்த ஆழ்வாரின் அருளிச் செயல்களில் ஆழங்கால் பட்டு அதுபவிப்பதற்கு இப்பனுவல் ஒரு துரண்டுகோலாக் - ஏன்? ஊன்றுகோலாகவும் - அமையும் என்று நம்பு கின்றேன். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறி னால் என்னுடைய இந்த முயற்சி பயனுள்ளதாயிற்று என்று மகிழ்வேன். தம்மையும் தமது அருளிச் செயல் களையும் அறிமுகப்படுத்திய என்னை ஆழ்வாரும் வாழ்த்தி ஆசி கூறுவார் என்றும் உறுதி கொள்கின்றேன். . திருப்பதியிலிருந்து ஒய்வு பெற்று 1978 சனவரி 14 ஆம் நாள் சென்னையில் குடியேறியதிலிருந்து தேனாய் கன்ன வாய் அமுதாய் த் தித்திக்கும் ஆழ்வார் பாசுரங்களை வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன்போது (நான்முகன் திருவந்தாதி - 63) என்றவாறு என் காலம் கழிகின்றது. என் ஆராய்ச்சியின் போது ஆழங்கால் பட்ட பாசுரங்களை மீண்டும் மனத்தில் இருத்தி அசை போடுவதற்குப் பெற்ற வாய்ப்பின் காரண மாக இந்நூல் பிறக்கின்றது. என் அநுபவம் இப்பனு: வலைப் படிப்போரிடமும் ஏற்படுத்துமானால் அதனை யான்பெற்ற பெரும் பேறாகவே கருதுவேன். . தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளும் ஆந்திரத்தில் சுமார் 20 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு ஊதியம் கூடப் பெறாது தவிக்கும் அடியேனுக்கு ஏழுமலையான் ஒரளவு நிதி வழங்கி (நூலின் முட்டுவழியில் 50% விழுக்காடு) உதவி புரிந்திராவிடில் இந்நூல் அச்சு வாகனம் ஏறிக் கற்போர் கரங்களில் கவினுறத் தவழ்வதற்கு வாய்ப்பே இருந்திராது. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்ற,