பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii பேருண்மையை அறிந்து செல்வச் சீமானாகத் திகழும் ஏழுமலையான் அகலகில்லேன் இறையும் என்று அவன் திருமார்பை விட்டு அகலாதிருக்கும் செல்வச் சீமாட்டியைத் தாங்கிக் கொண்டிருப்பவன். இந்நிலையில் நாடோறும் எண்ணற்ற பக்தர்கள் அவனுடைய கருவூலத்தை நிரப்பி வழியச் செய்து கொண்டுள்ளனர். இந்த உறுபெருஞ் செல்வத்தை அவன் அடியார்கள் பற்றி எழுதப் பெறும் நூல்கட்கு வரையாது வழங்கும் நிதி உதவித் திட்டத்தில் இந்நூலும் நிதி உதவி பெற்று வெளி வருகின்றது. இந்த வேங்கடம் மேவிய விளக்கு’, மேலும் நான் எழுதி வைத்திருக்கும் மாணிக்கவாசகர்', 'சடகோபன் செந்தமிழ்", ஆழ்வார்களின் ஆரா அமுது”, 'தாயுமான அடிகள் ஆகிய வற்றிற்கும், எழுதிவரும் கீதைப் பொழிவுகட்கும் எழுத நினைத்திருக்கும் வடலூர் வள்ளல், பட்டினத்தடிகள் முதலான பக்திப்பனுவல்கட்கும் நிதி ஒளிகாட்டி அவற்றை அச்சேறச் செய்வான் என்ற நம்பிக்கை என்பால் உண்டு. இவனது கருவியாக இயங்கி வரும் தேவஸ்தானத்தாருக்கும். குறிப்பாகத் திரு K. சுப்பராவ், திரு N.S. இராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது. இந்நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய கற்பக அச்சக மேலாளர் திரு. க. நாராயணன் அவர்கட்கும், எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக்கட்டை தயாரித்து மூவண்ணத்தில் அச்சிடும் வரையிலும் பொறுப்பேற்று உதவிய ஓவியமன்னர் திரு. P. N. ஆனந்தன் அவர்கட்கும், காப்புறை (Lamination) போட்டு உதவிய மாருதி லாமினேஷன் உரிமையாளர் திரு. பார்த்திபன் அவர்கட்கும் இவ்வளவும் ஆனநிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத் தவழச் செய்த திருநாவுக்கரசுக்கும் என் இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன்.