பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv இந்த பக்திப் பனுவலுக்குச் சிறப்புப்பாயிர மாலை" வழங்கிச் சிறப்பித்தவர் திரு. இரா. திருமுருகன் என்பார். செந்தமிழ்த் தென் புதுவை என்னும் திருநகரில் கல்வித் துறையில் பணியாற்றி வரும் என் அருமை நண்பர். தமிழில் கல்வியியலில் முதுகலை, மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதப் பட்டங்கள் பெற்றவர். பிரெஞ்சு மொழியியல், புல்லாங் குழல் இத்துறைகளில் சான்றிதழ்கள் பெற்றவர். இவர் நெஞ்சினின்று தமிழ், பேச்சாக, கவிதைகளாக வெளிவரும்; இசை புல்லாங்குழல் வழியாக மூச்சாக வெளிவரும். கண்டத்தாலும் இசைத்துக் கண்டாரை சர்க்கும் பெற்றியர். மாணவர்கட்கென்றும் பொதுமக்கட்கென்றும், அறிஞர்க்கென்றும் 18 நூல்களைப் படைத்துத் தந்த பாவலர். தமிழ் இலக்கணம், மொழியியல், இலக்கணம், கருநாடக இசை, இடப்பெயர் ஆய்வு, நாட்டுப்புறவியல், சித்த மருத்துவம் இப்பொருள்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட ஆய்வு அறிஞர். பல கவியரங்குகள், கருத்தரங்குகள், இசையரங்குகள் இவற்றில் பங்கு கொண்டு இசைத்தமிழையும் இயற்றமிழையும் பரப்பி வரும் பண்பாளர். இவர்தம் தொண்டினைப் பாராட்டும் வகையில் இவர் பெற்ற விருதுகள் இலக்கணச்சுடர் (1979), இயலிசைச் செம்மல் (1981), தமிழ்க் காவலர் (1985) என்பன. பல்கலைக் கழகம் பல்கலைச் செல்வராகிய இவரைப் பயன் படுத்திக் கொள்ளாதது வருந்தத் தக்கது. ஐம்பத்தெட்டு அகவையை எட்டினாலும் டாக்டர் பட்டம் பெறும் நோக்குடன் ஆய்வு செய்து வருபவர். பழகுவதற்கு இனியர். நவில்தொறும், நூல்நயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். மாணவர்கள்பால் பேரன்பு கொள்ளும் பேராசான். இசையின்பால் ஈடுபாடு கொண்ட இவர்தம் இல்லம் ஏழிசைச்சூழல்' என்பது. இந்தச் சீரிய இல்லத்திற்கு பல புலவர்கள் வந்து அளவளாவுவதுண்டு. பாண்டிச்சேரியா? புதுச்சேரியா? என்ற இவர்தம் ஆய்வுக்