பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV கட்டுரை அறிஞர் உலகத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. பாரதியும் பாரதிதாசனும் இவர்தம் குறிக்கோள் நாயகர் களாகத் திகழ்வதால் இவர் விரைந்து கவிபாடும் வேந்தரானார். ஒரு தென் புதுவைக் கவிஞர் மற்றொரு தென் புதுவைப் பட்டர் பிரான் வாழ்க்கைத் திறனை விளக்கும் பனுவலுக்கு சிறப்புப் பாயிரமாலை வழங்கியது மிகப் பொருத்தமாக அமைந்து விட்டது. பட்டர் பிரான் அருளால் இவர்தம் கவிபாடுந் திறன் மேலும் வளர்ந்து பொலியும், சிறப்புப் பாயிரமாலை பட்டர்பிரானின் ஆசியைப் பெற்றுக் கொண்டே திகழும் என்பதற்கு ஐயம் இல்லை, மாலை வழங்கிய மதிநலம் அமைந்த மாண்பார் நண்பருக்கு என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது. . இந்த பக்திப் பனுவலுக்கு அணிந்துரை நல்கிய பேரன்பர் திரு. க. பத்மநாப ரெட்டியார் அவர்கள் நான் பிறந்த திருச்சி மாவட்டம் பெருவள நல்லூரில் வாழ்ந்து வரும் ஒரு சிறந்த பாகவதோத்தமர். என்னைப் போன்றே பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மகப்பேறற்ற பெரிய தந்தையார் அரவணைப்பில் வாழ்ந்தவர். பெரிய தந்தை யாரோ வைணவ கிரந்தங்களைக் காலட்சேபம் செய்யும் திறம்படைத்த வைணவச் செம்மல். பெரிய தந்தையாரின் வைணவச் செல்வம் பிதிராஜிதச் சொத்தாக இவர்பால் இறங்கியுள்ளதைப் பல்லாண்டுகளாக அடியேன் கவனித்து வந்தவனாதலால், இவரிடம் என் வைணவ சம்பிரதாய நூலொன்றுக்கு அணிந்துரை பெறவேண்டும் என்ற அவா சில ஆண்டுகளாகவே என் உள்ளத்தை நெருடிக்கொண்டி ருந்தது. அந்த அவாவை இந்த நூல் நிறைவு செய்கின்றது. இந்தத் திருமாலடியார் பெஞ்சு வாடகை தந்து பள்ளி பிறுதித் தேர்வு முடியப் படித்திருந்தாலும் அதற்குமேல் கற்றதும் கேட்டதுமே அதிகம். இவர் தமிழின்மேல் இருந்த ஆர்வத்தால் தமிழைத் தனியாகக் கற்று வித்துவான் - புகுமுகம், வித்துவான் . முதல்நிலைத் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றவர். வித்துவான் . இறுதி நிலைத்