பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi தேர்வு பெற்றால் அலுவல் பார்க்கும் அவா வந்துவிடும், என்று பெற்றோர் அத்தேர்வு எழுதுவதற்குத் தடை விதித்தனர். பரம்பரைத் தொழிலாக உழுவித்துண்டு. வாழ்வதையே வாழ்க்கையாக அமைத்து விட்டனர். ஒருவிதத்தில் இது நல்லதே. எம்பெருமான் திருவுள்ளமும் இஃதே போலும். எனினும், தமிழின்பால் இருந்த ஆர்வம் வைணவ இலக்கியத்தின்பால் திரும்பியது அந்த நாராயண. னின் திருவருளே என்று கருதுவது பொருந்தும், சிறுவனாக இருந்தபோது பெரிய தந்தையாரின் காலட்சேபம் கேட்ட காரணத்தால் இவர் திருமால் அடியாரானார். இதனால் 1941 முதல் 1947 முடிய திருவரங்கத்தில் இவரும் முதுபெரும் புலவர் பெ. இராமாநுஜ ரெட்டியாரும் சேர்ந்து பூரீ உப. வே. புத்தங்கோட்டம் திரு. சீநிவாச ஆசாரிய சுவாமி களிடமும் காலட்சேபம் கேட்கும் பேறுபெற்றவர். பின்னர், தனியாகத் திருவரங்கம் - மதுராந்தகம் திரு. உப. வே. வீரராகவாசாரிய சுவாமிகளிடம் சுவாமி தேசிகனின் கிரந்தங்கள் காலட்சேபம் கேட்டு உய்ந்தவர். அடுத்து பண்டித சித. நாராயண சுவாமிகளிடம் இலக்கணப் பாடம் கேட்டு தமிழறிவை பெருக்கிக் கொண்டவர். பக்தியே வடிவமானவர். சத்சங்கத்திலேயே நாட்டம் கொண்டவர். பல அரங்குகளில் வைணவத்தைப் பேசி அதனைப் பரப்பி வருபவர். திருமண் காப்பு தீட்டப்பெற்ற இவர்தம் மலர்ந்த முகப் பொலிவும் வைணவ சம்பிரதாயப் பேச்சும் அப்பேச்சில் உதிரும் வைணவ தத்துவங்களும் கண்டாரை ஈர்க்கும் பான்மையவை. இவருடன் கிட்டத் தட்ட நாற்பது ஆண்டு பழக்கம் இருந்தாலும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே நெருங்கிப்பழகும் வாய்ப் புகள் ஏற்பட்டன. காரணம், நான் வைணவ இலக்கியத் திலும் வைணவ தத்துவத்திலும் ஈடுபட்டதே யாகும். இதனால், இவர்தம் பல அருங்குணங்கள் அடியேனைக் கவர்ந்தன. இத்தகைய பக்திச் செல்வரின் அணிந்துரை இத்துரல் பெற்றது. பெரியாழ்வாரின் திருவருளேயாகும்.