பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii . இவர் ஆசியால் இந்நூல் பொதுவாகத் தமிழ்கூறு நல்லுல: கிலும் சிறப்பாக வைணவப் பெருமக்களிடமும் பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை. அணிந்துரை அருளிய அன்பருக்கு தலையலாது கைம் மாறிலனே'. - திரு. K. வேங்கடசாமி நாயுடு அவர்களை அறிஞருலக மும் பக்தியுலகமும் நன்கு அறியும்; பாமரரும் நன்கு அறிவர். திரு. நாயுடு அவர்கள் சிறந்த தேசியவாதி; நாட்டுப் பற்றாளர். காந்தியடிகள்வழி ஒழுகும் நற்பண்பினர். இவர் வாழ்ந்த காலத்தில் கதருடையே இவர்தம் திருமேனிக்குப் பொலிவு தரும். செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவராயினும் எளிமை வாழ்க்கையையே விரும்புபவர்; எளிமையாகவும் வாழ்ந்தவர். சாதி, சமய, அரசியல் பற்றுக்களைக் கடந்து மனித நெறியில் வாழ்ந்து மன்பதைக்குப் பேருதவிகள் பல புரிந்தவர். சிறந்த வழக்குரைஞர், சமூகச் சீர்திருத்தவாதி, சிறந்த கல்வி யாளர், நேர்மையான அரசியல்வாதி, உயர்ந்த ஆட்சி யாளர், பன்மொழிகளைப் பாங்காக அறிந்த மேதை, சிறந்த வைணவ சீலர் - இவை யாவும் உருண்டு திரண்ட உயர்ந்த மனிதர், சுருங்கக் கூறினால் பண்புடையார் பட்டுண்டு. உலகம்" , உயர்திணை என் மனார் மக்கட் சுட்டே' என்ற பொன்மொழிகட்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர். அருமை இராஜாஜி அமைச்சரவையில் இடம்பெற்று அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பேற்று சிறந்த முறையில் பணியாற்றியவர். திருமலை - திருப்பதி தேவஸ்தான ஆட்சிக்குழுவில் உறுப்பினராகவும், பின்னர் அக்குழுவின் தலைவராகவும் இருந்து பல்லோர் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் பணியாற்றியவர். இறைபணி இவர்தம் இதயத் துடிப்பாக இருந்ததால் இவர் ஆற்றிய பணி பல்லோர் மகிழும் வண்ணம் இருந்தது. பல்லாண்டுகள் சென்னை வைணவ மகாசங்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றியமை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்: