பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 209 கும்பகோணத்தில் உள்ளது, சார்ங்கப்பாணிப் பெருமாள் கோயில் என வழங்கப் பெறுவது. ஊர் நடுவே நடு நாயகம் போல் அமைந்துள்ளது. குடந்தையிலுள்ள எல்லாக் கோயில்களை விடவும் பெரியது, பதினொரு மாடங் களையுடைய கோபுரத்தைக் கொண்டது. பெருமாள் சந்நிதியும் முன் மண்டபங்களும் ஒர் இரதம்போல் அமைக்கப் பெற்றுள்ளன. மண்டபத்தின் நான்கு பக்கங் களிலும் சக்கரங்கள், இரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் உள்ளன. இதனை நோக்கியே திருமங்கை யாழ்வாரும் இத்திருக்கோயில் எம்பெருமானைப் பற்றி மங்களாசாசனம் செய்துள்ள திருஎழுக் கூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தை இரதபந்தம் என்ற சித்திரக் கவியாக அமைத்தனர் போலும். இது சரணாகதி தத்துவத்தை விளக்கும் பாசுரமாகும். 14. வேங்கடம்: வேங்கடத் தெந்தாய் (2.7:1) என்பது மங்களா சாசனம். இஃது இன்று ஆந்திர மாநிலத்தில் சேர்ந்துள்ளது. பதினோராம் நூற்றாண்டில் தான் பெரும் புகழ் அடையத் தொடங்கியது. இராமாதுசர் திருவேங்கடமுடையான்டால் காட்டிய அக்கறையும் அவர் சொந்தப் பெருமையும் சிறப்புமாகச் சேர்ந்து திருக்கோயிலின் புகழை மிகவும் உயர்த்தி விட்டது. இராமாநுசர் திருமலைக்கு மூன்று முறை வந்ததாக அவர் வரலாற்றால் அறிகின்றோம். திருமலையில் இன்று நடைபெறும் வழிபாட்டு முறைகள் யாவும் இராமாதுசர் 13. 1948.மே மீ ஒருமுறை என் துணைவியுடன்(மக்கட் பேறு இல்லாத காலம்) சேவித்தேன். 1960-ஆகஸ்டு முதல் 1977-அக்டோபர் வரை அவன் திருவடி வாரத்தில் தமிழ் தொண்டாற்றினேன். அவன் இப்போது என் இதயத்தில் நிரந்தரமாகவே குடியேறியுள்ளான். 1983இல் கட்டி முடித்த வேங்கடம்" என்ற என் குடிசையிலும் வாழ்ந்து வருகின்றான். - வி.14