பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 விட்டு சித்தன் விரித்த தமிழ் வகுத்தவையே என்று திருமலையொழுகு' என்ற நூலால் அறிகின்றோம். திருவாய் மொழிக்கு ஆறாயிரப்படி என்ற முதல் உரை வகுத்த திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருப்பதியைச் சேர்ந்தவர். வேங்கடத் தெம்மான் ஆழ்வார்களில் பதின்மரின் மங்களாசாசனம் பெற்றவன். இவை பதின்மர் செந்தமிழ் என்று திருவேங்கடக்கலம்பக ஆசிரியரால் போற்றப் பெற்றுள்ளது. இவற்றுள் பெரி யாழ்வார் வாக்கில் இடம் பெற்றவை ஏழு பாசுரங்கள். 15. கோவர்த்தனம்; வடமதுரையிலிருந்து 14 கல் தொலைவு. அழகான தாழ்வான மலை. மலையின் நீளம் 7 கல்; சுற்றளவு சற்றேறக்குறைய 14 கல் தொலைவு. வல்லப நெறி புழக்கத்தில் உள்ளது. மலையின்மீது சிரீநாதர் ஆலயம் உள்ளது. இப்போது சிலை இல்லை. இஸ்லாமிய படையெடுப்பால் நேரிட்ட விளைவு இது. சிலை உதயபூரில் உள்ளது. கண்ணன் மாடு மேய்த்த இடம்; குடையாகக் கவித்து கல்மாரி காத்தான். பெரியாழ்வார் மங்களா சாசனம் (2.10:4; 3.5). சாலை உண்டு. இது 108 திருப்பதி களில் சேரவில்லை. 16. கண்ணபுரம்': நன்னிலம் இருப்பூர்தி நிலையத் திலிருந்து 4 கல் தொலைவு, பேருந்து வசதி உண்டு. திருப்புகலூரிலிருந்து ஆற்றைக் கடந்து கல் தொலைவு நடக்க வேண்டும். திருப்புகலூரிலிருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கிடைக்கும். பெரியாழ்வார் மங்களா சாசனம் (1,6:8). 14. ஆறாயிரப்படியின்-தமிழாக்கம். நானும் டாக்டர் வரதாச்சாரியும் சேர்ந்து முடித்தது. 5 தொகுதிகளாக வெளி வர வேண்டிய இப்பனுவல் அவன் அருளால் வெளி வருதல் வேண்டும். 15. 1968 திசம்பரில் குடும்பத்துடன் சேவிக்கும் பேறு பெற்றேன்.