பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அநுபவம் 2} { 17. ஆய்ப்பாடி: வ ட மது ைர யி லி ரு ந்து 4 கல் தொலைவு. சிறிய ஊர். நந்தகோபன் கண்ணனை வளர்த்த இடம். பெரியாழ்வார் மூன்று பாசுரங்களால் (2.2:3, 2.3:7, 3.4:10) மங்களாசாசனம் செய்துள்ளார். இன்று அந்தத் திருக்கோயில் காணப் பெறவில்லை. 18. திருப்பாற்கடல் : வடதுருவத்திற்கு அப்பால் இருப்பதாகச் சொல்லப் பெறுகின்றது. மனிதர்கள் சென்று சேவிக்க முடியாத இடம், யோகியர், முனிவர், சூக்கும சரீரத்தையுடைய மனிதர்கள் சென்று சேவிக்கலாம். பெரியாழ்வார் மங்களாசாசனம் (4.10:5; 5.1:7; 5.2:10: 5.3:7; 5.4.9, 10) 19. வில்லிப்புத்துனர் இருப்பூர்தி நிலையம். மதுரை யிலிருந்து நல்ல பேருந்து வசதிகள் உண்டு. சத்திரங்கள், உணவு விடுதிகள் உண்டு. பெரியாழ்வார் ஒரே பாசுரத்தில் (2.2:6) மங்களாசாசனம் செய்த திவ்வியதேசம். 16. 1965.செப்டம்பரில் என் இளைய மகன் டாக்டர் இராமகிருஷ்ணனுடன் (M.D) இத்திவ்விய தேசத்தைச் சேவிக்கும் பேறு பெற்றேன்.