பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தர்யாமித்துவ அநுபவம் 2瑟3> பூக்களையும் திருத்துழாயையும் கொய்யும்போதும்' அவற்றை மாலையாகத் தொடுக்கும்போதும் எம்பெருமான் வடபத்திர சாயியைச் (ஆலிலைப் பள்ளியான்) சதா, நினைத்த வண்ணம் இருப்பார்; கனவு வந்தாலும் அதில் இந்நிகழ்ச்சிகளே குமிழியிட்டெழும். அர்ச்சாவதார எம் பெருமான்கள் அனைவருமே இவர் மனத்தில் அந்தர் யாமியாய் எழுந்தருளியிருப்பர். தம் அந்தர்யாமித்துவ அநுபவத்தை, உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை; ஒவா தேநமோ நாரணா!' என்று எண்ணா நாளும் இருக்குளசு சாம வேத காண்மலர் கொண்டுண பாதம் கண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்றெ னக்கவை பட்டினி நானே. (பெரியாழ். திரு. 5.1:6) 1உண்ணாநாள்.உண்ணாதொழிந்தபோது; ஒவாதே. இடைவிடாமல்; எண்ணா.அநுசந்திக்கப் பெறாத; நாள் மலர். அப்போதலர்ந்த புதிய மலர்; நண்ணா.கிட்டப்பெறாத.1 என்று கூறுவர். தாரக போஷக போக்கியங்களெல்லாம் எம்பெருமான் திருவடிகளே' என்பதை இங்குத் தெளிவாக்கு கின்றார். இவ்வுலகத்தில் உள்ளார் அனைவரும் ஒரு பொழுது உண்ணாதொழிந்தால், பசியினால் மிகவும் தளர்ந்து வருந்துவர்; அடியேனது இயல்பு அப்படியன்று. திருமந்திரத்தை அநுசந்திக்கப் பெறாத நாளும், தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர்த் தூய்த்தொழுது' (நாச். திரு. 1:9) ஏத்தப்பெறாத நாளுமே அடியேனுக்கு உண்ணாநாள். இவ்விரண்டும் அடியேனுக்கு வாய்க்கப்: பெற்ற நாள் உண்டு களிக்கப்பெற்ற நாளாகும் என்கின்றார். சோற்றால் வயிற்றை நிரப்பினநாள்: உண்டநாள்; அப்படி நிரப்பாத நாள் பட்டினிநாள்' என்ற