பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 விட்டு சித்தன் விரித்த தமிழ். எண்ணம் என்றும் அடியேனிடத்தில் இல்லை. நான் வயிறார உண்டபோதிலும், திருமந்திர அநுசந்தானமும், பூரீபாதசேவையும் தட்டுப்படாதாகில் அந்நாள் எனக்குப் பட்டினி நாளே' என்பது கருத்தாகும். இதனையே, கண்ணுவா ரிடரைக் களைவானே! (5.1:8) (நண்ணுவார்.தியானிப்பவர்.) என்று பிறிதொரு பாசுரத்தில் குறிப்பிடுவர். இந்த ஆழ்வாரின் அந்தர்யாமித்துவ அநுபவம் பல பாசுரங்களில் குமிழியிடுகின்றன. இவற்றில் ஆழங்கால் படுவோம். அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை (5.2:10) (அரவத்து அமளி.பாம்புப் படுக்கை அரவிந்தப் பாவை-பெரிய பிராட்டியார்; அகம்படி. உடம் பாகிய இடம்; பரவை-கடல், ! என்பது பாசுரம், இந்தப் பதிகத்தின் தொடக்கத்தில் பைக் கொண்ட பாம்பணையோடும்-மெய்க் கொண்டு: வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்’ (5.2:1) என்று. அருளிச் செய்ததையொட்டி இறுதிப் பாசுரத்தில் முத்தாய்ப் பாக்குகின்றார். எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும் திருவனந்தாழ்வானிடத்தும் மிக்க அன்பாதலால் அவற்றை விட்டுப் பிரிந்து வர மாட்டாமல் அவற்றையும் உடன் கொண்டு எழுந்தருளினன். இதில் மற்றுமுள்ள நித்தியசூரி களும் அடங்குவர் என்று கொள்ளத் தக்கது. இதில் வியூக கிலை எம்பெருமான் எழுந்தருளியிருப்பது பேசப் படுகின்றது. -