பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தர்யாமித்துவ அநுபவம் 215 இதே கருத்தை இன்னொரு பாசுரத்தில் சற்று வேறு விதமாக அநுபவிக்கின்றார். அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுகொய்தாக வைத்துஎன் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய்; எம்பிரான் கினைந்தென்னுள்ளே கின்றுகெக்குக் கண்கள் அசும்பொழுக கினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் கேமி நெடியவனே. (5.4:8) [அனந்தன்.ஆதிசேடன்; கருடன் - பெரிய திருவடி, நொய்தாக அற்பமாக வைகி - பொருந்தி: நினைந்து நின்று. அதுசந்தித்துக் கொண்டு; நெக்குசிதிலமாக்கப் பெற்று; அசும்பு . கண் நீர்; சிரமம் தீர்ந்தேன்-இளைப்பாறப் பெற்றேன்; நேமி.திரு வாழி, ! என்பது பாசுரம். எம்பெருமான் தன்னை அநுபவிக்கும் அந்தரங்க அடிமைகளான நித்திய சூரிகள் அனைவரிடத்தும் அன்பைக் குறைத்து தம்மைப் போக்தாவாகக் கொண்டு அந்த அன்பு முழுவதையும் தம் ஒருவர் பக்கவில் அமைத்தருளின பேருதவியைப் பேசுகின்றார். இதில், சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காதனமாம்" (முதல் திருவந். 53) என்பதுபோல் பலவிதப் பணிவிடை களையும் செய்யவல்ல திருவனந்தாழ்வானிடத்திலும், உவந்து ஏறுதற்குரிய பெரிய திருவடியினிடத்துமே அன்பு குறைந்ததென்றால் மற்றையோரிடத்தது எப்படி என்பதைச் சொல்லத் தேவை இல்லை, இப்படி என்னை வாழச் செய்தாய் எம்பிரான்' என்று கூறிய ஆழ்வாரை நோக்கி, *ஆழ்வீர்! இன்று வாழ்ந்ததாகக் கூறும் நீர் நெடு நாளாக இவ்விருள்தருமா ஞாலத்தில் திரிந்து அலமந்து மிகவும் இளைத்தீரே என்று வினவுவதாகக் கொண்டு பின்