பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 விட்டு சித்தன் விரித்த தமிழ் இரண்டு அடிகளில் அதற்கு விடை கூறுகின்றார். ஐயனே! உன்னை இன்று நெஞ்சார நினைத்து, பிறகு நெஞ்சழியும்’ (பெரிய திருவந். 34) என்றபடி மனத்தின் தளர்ச்சியும் பெற்று, கண்களும் நீர் மல் கப் பெற்று, பிறகு, இவ்வாறான பயன்கள் பிறக்கைக்காக நீ செய்தருளின நன்றிகளைச் சிந்தித்துக் கொண்டே சகல தாபங்களும் தீரப் பெற்றேனாகையால் என் சிரமத்தைப்பற்றி உனக்குச் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை' என்கின்றார். இதற்கு அடுத்த பாசுரத்தில் எம்பெருமான் தம்முடைய போகத் தானங்களையும் துறந்து தம்முடைய நெஞ்சையே தமக்கு உரிய இடமாக அங்கீகரித்ததாகச் செப்புகின்றார். பனிக்கடலிற் பள்ளிக்கோளைப் பழகவிட்டு ஓடிவந்துனன் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள கம்பி தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று உனக்கிடமா யிருக்க என்னை உனக்குரித் தாக்கினையே (5.4:9) (பனிகடல்.குளிர்ந்த திருப்பாற்கடல்; பள்ளிகோளை. பள்ளிகொள்ளுதலை; பழகவிட்டு - பழகியதாக விட்டு(மறந்துவிட்டு); உரித்து.சொந்தமாக 1

திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளுதலை விட்டு அங் கிருந்து ஓடிவந்து என் இதயமாகிய கடலில் வாழவந்து விட்டாய். குளிர்ந்த திருப்பாற்கடல், ஒப்பற்ற ஆதித்திய மண்டலம், ஒப்பற்ற பரமபதம் இவை உனக்கு ஏற்ற இடங்களாக இருந்தும் அவற்றைத் துறந்து விட்டு மிகவும் நீசனான அடியேனை உனக்கு உரிய வசிக்கும் இடமாக்கிக் கொண்டனையே! இஃது என்ன செளசீல்யம்! என் கின்றார். அடுத்து,