பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.220 விட்டு சித்தன் விரித்த தமிழ் ! விக்கிரம்-வீரச்செயல்; ஒழியாமல்-தப்பாமல்; சுவர் வழி.சுவரில் ஒவியம் எழுதுவதுபோல்.) என்பது பாசுரம். முன் பாசுரத்தில் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்" என்பதனை இப்பாசுரத்தில் வைத்த முறையைச் செப்புகின்றார். மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா என்று திருமொழியைத் தொடங்கினமை யால், அந்த மல்லவதம் முதலிய சிறுச் சேவகங்களை யெல்லாம் தம் நெஞ்சில் நன்கு அமைத்ததாகப் பேசு கின்றார். ஒன்றொழியாமல்’ என்பதன் கருத்து: வியாசர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிர மங்கள் தமக்கு விஷயமான படியைக் குறிப்பதற்காக மோலிகன் வரலாறும் (2. 7: 8), இராமனைப் பிராட்டி மல்லிகை மாலையில் கட்டின நிகழ்ச்சியும் (3.10:2) மற்ற முனிவர்களின்றி இவ்வாழ்வார் ஒருவருக்கே ஞான விஷய மாயினவாறு கருதத் தக்கவை. ஆழ்வார் எம்பெருமானால், சமயர்வற மதி நலம் அருளப்பெற்றமையால் அவனுடைய விக்கிரமங்கள் அனைத்தையும் குறையறக் கண்டு அநுபவித் தமை அறியத்தக்கது. ஆழ்வாரின் அந்தர்யாமித்துவ அநுபவம் இன்னொரு திருமொழியாலும் (5.2) அறிய முடிகின்றது. இத் திருமொழியின் ஒவ்வொரு பாசுரமும் பண்டன்று பட்டினம் காப்பே என்று முடிகின்றது. பட்டினம் என்பது இராஜதானி என்பது பொருள். ஆன்மா எம்பெருமானின் இராஜதானி யாகின்றது. எம்பெருமான் ஆழ்வார்க்குத் தன்மீது அமைந்த அவாவின் மிகுதியைப் பல வகைகளால் அறிந்து அவருடைய திருவுள்ளத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டருளினபடியையும் அதனால் ஆழ்வார் இனி நோய்கள் முதலியவை தம்மை அணுகவொண்ணாதபடி அவற்றை ஒறுத்தருளினபடியையும் கூறுவது இத்திருமொழி. இனி பாசுரங்களில் ஆழங்கால் படுவோம்.